‘எதற்கும் துணிந்தவன்’ படம் சரியாக போகதாது குறித்து இயக்குநர் பாண்டியராஜன் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ வெற்றி வரும் போது அதை நான் எளிமையாக கடந்து விடுகிறேன். ஆனால் தோல்வி வரும் போது துவண்டு விடுகிறேன். அதிலிருந்து வெளியே வர 3, 4 மாதங்கள் பிடிக்கும்.தோல்வியை அவ்வளவு சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஆண்டவன் அருளில் என்னுடைய படங்களெல்லாம் பெரிய அளவில் தோற்கவில்லை. இருப்பினும் கலெக்ஷன் ரீதியாக அது முன் பின்னராக வரும் போது, அதை ஆராய வேண்டியிருக்கிறது. என்னுடைய எல்லா கதைகளும் வெர்ஷன் 7, 8 என 12 வரை செல்லும். அதை படக்குழுவை சேர்ந்த அனைவரும் படிக்கிறார்கள். ஆனால் இறுதியில் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்றால், அதற்கு ஒரு நேரம் கொடுத்து அது ஏன் என்று ஆராய வேண்டும்.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை பொருத்தவரை, “ உண்மையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் எனக்கு மிகவும் பிடித்தமான படம். படத்தை பார்த்த சூர்யா சாரும் மிகவும் சந்தோஷமடைந்தார். சூர்யா நடிப்பில் வெளியான 7, 8 படங்களில் எதற்கும் துணிந்தவன் நல்ல கலெக்ஷனைதான் பெற்றிருக்கிறது.
சன் டிவியை பொருத்தவரை, நீங்கள் ஏன் அதைப் பற்றியே பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் என்று கடிந்து கொண்டார்கள். கலாநிதிமாறன் சாருக்கும் சரி, காவ்யா கலாநிதிமாறன் மேமுக்கும் சரி படம் மகிழ்ச்சியையே கொடுத்திருந்தது. அவர்கள் என்னிடம் சூர்யா சாரையே கூட்டிவாருங்கள் அல்லது வேறு யாரையாவது கூட்டி வாருங்கள். படம் செய்வோம் என்றார்கள். நான்கு மொழிகள் என்பதால் அதில் லாபம் கிடைத்தது.” என்று பேசினார்.
இயக்குநர் பாண்டிராஜ் முதன்முறையாக சூர்யாவுடன் கைகோர்த்த திரைப்படம் ‘ எதற்கும் துணிந்தவன்’. பிரியங்கா மோகன், வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. படத்தின் எதிர்பார்ப்பால் கலெக்ஷன் ரீதியாக நல்ல வசூல் வந்தாலும், விமர்சன ரீதியாக கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் படத்தின் இயக்குநர் பாண்டிராஜை கடுமையாக சாடியிருந்தார்கள்.