நட்சத்திரம் நகர்கிறது படம் என்னுடைய சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 


இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த பா.ரஞ்சித் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அவர் படங்களில் பேசப்பட்ட அரசியல் களமும், அவரது பார்வையில் காட்டப்பட்ட சமூக கட்டமைப்பும் தவிர்க்க முடியாத இயக்குநர் பட்டியலில் அவரை இணைத்தது. இதனிடையே அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். 






இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன், டான்சிங் ரோஸ் ஷபீர், கலையரசன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவுள்ளது. மேலும் நட்சத்திரம் நகர்கிறது படம் முழுவதும் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கட்டாய திருமணம், திருநங்கை, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கிடையேயான காதல் உள்ளிட்ட பல விஷயங்கள் இப்படத்தில் அழுத்தமாக பேசப்பட்டுள்ளது. 






இந்த படம் பற்றி பேசியுள்ள பா.இரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது படம் காதல் படம் அல்ல... காதலைப் பற்றிய படம் என தெரிவித்துள்ளார். மேலும்  ஆணும் பெண்ணும் சந்திக்கும்பொழுது காதலாக ஆரம்பம்.  அது குடும்பத்தில் தெரியும் போது தான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது. இப்போது காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்கும் நிலையில்,  அதை பற்றி விவாதிக்கிற படம்தான் "நட்சத்திரம் நகர்கிறது".  இதில் ஆண்,பெண் காதல்கள் மட்டுமில்லாமல் ஒரு பாலின காதலைப் பற்றியும், திருநங்கையின் காதலைப்பற்றியும் பேசியுள்ளோம் என பா.ரஞ்சித் கூறியுள்ளார். 






அப்போது இசைஞானி இளையராஜா பற்றி பேசும் போது, அவரோடு இணைந்து வேலை செய்ய முடியும் என இன்று வரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்குது. இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்துள்ளது. அவரை நம்பி தான்  என பா.ரஞ்சித் கூறியுள்ளார். மேலும் என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் இது முக்கியமான படமாக இருக்கும் என்று  பா. ரஞ்சித்  தெரிவித்துள்ளார்.