Chiyaan 61 : இன்று காலை நடந்த சீயான் 61 படத்திற்கான பூஜையில் பல சுவாரஸ்ய தகவல் வெளியாகிவுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித், சியான்61- ஆவது படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனை (Kamalhaasan) வைத்து படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மகான். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தை ஸ்டுடியோ க்ரின் நிறுவனத்தின் (Studio Green) சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்தநிலையில், பா. ரஞ்சித்தின் (Pa.Ranjith) இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் சீயான் 61 படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பூஜை நடக்கும் நிகழ்ச்சியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேரலை செய்தனர். மேலும் பா. ரஞ்சித்தின் முதல் திரைப்படத்தில் இருந்து இசையமைத்து வந்த சந்தோஷ் நாராயணன் பதிலாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
மேலும், சீயான் 61 படத்தின் பூஜை நிகழ்வு நடந்துவரும் வேளையில் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் Chiyaan61 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல், மறுபுறம் பா. ரஞ்சித்தின் ரசிகர்களும் PaRanjith என்ற ஹேஸ்டேக்கை தன் பங்குக்கு இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றனர்.
சீயான் 61 -வது படத்தின் கதை களம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இடம் பெறுவதாகவும், கே.ஜி.எஃப் தங்க சுரங்கத்தில் இருந்த இந்திய
மக்களின் வாழ்வை அடிப்படையாக வைத்து உருவாகப்போகிறது எனவும் தகவல் வெளியாகிவுள்ளது. இப்படத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள உண்மையான கே.ஜி.எஃப்பில் ஷுட் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சீயான் 61, 2023-ஆம் ஆண்டின் முதல் பாகத்தில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படமானது முப்பரிமாணமத்தில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இயக்குநர் பா.ரஞ்சித், சீயான் 61- ஆவது படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கமலுக்கான பட கதை தயாராக உள்ளதாகவும், மேலும் அக்கதையை விரிவுபடுத்தவுள்ளதாகவும் பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.