தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான இளையராஜாவை, இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பசுபதி, நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் 2024 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம் நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார். மேலும் தொடர்ச்சியாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.ஒவ்வொரு வருடமும்  தலித் மக்களின் வாழ்க்கை , கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் திரைப்படத் திருவிழா, இசை நிகழ்ச்சி என  சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 






வரும் டிசம்பர் 23ஆம் தேதி கே.ஜி எஃப் மற்றும் 24ஆம் தேதி ஓசூரிலும் என் இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு எந்த வித கட்டணமும் கிடையாது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.


இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்த புகைப்படங்களை பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்போது அவருக்கு நீலம் பதிப்பகம் வெளியிட்ட பாபாசாகேபின் காதல் கடிதம், விசாவுக்காக காத்திருக்கிறேன் ஆகிய இருபுத்தகங்களை பரிசாக வழங்கினார். மேலும் அந்த புகைப்படத்தில், “எண்ணமெல்லாம் வண்ணமம்மா” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Margazhiyil Makkalisai 2023: கோலார் தங்க வயலில் ‘மார்கழியில் மக்களிசை’.. ‘தங்கலான்’ இயக்குநர் ரஞ்சித்தின் பிளான் என்ன?