நடிகர்கள் சிவகார்த்திகேயன், வினய் , யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ இந்த படத்தை கோலமாவு கோகிலா என்ற வெற்றிபடத்தை கொடுத்த நெல்சன் இயக்கியுள்ளார். டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.  படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.படம் வருகின்ற 9 அக்டோபர் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் டாக்டர் ட்டெய்லரின் வரவேற்பானது பீஸ்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அமைதிகாத்திருந்த விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட்டை தருமாறு கேட்கத் தொடங்கியுள்ளனர், முன்னதாக ட்விட்டரில்  #அப்டேட்_குடுங்க_நெல்சன் என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  





இதற்கிடையே  . தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் பேசிய அனிருத்திடம்  ரசிகர்கள் பீஸ்ட் படம் தொடர்பாக அப்டேட்டை தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.  அப்போது அது குறித்து பேசிய அனிருத், '' பீஸ்ட் அப்டேட் வரும்.. படக்குழு கொஞ்சம் நேரமெடுத்து அப்டேட்டை அறிவிப்பார்கள்'' எனத் தெரிவித்தார். இந்நிலையில் டாக்டர் புரமோஷனில் பங்கேற்ற இயக்குநர் நெல்சனிடம் ரசிகர் ஒருவர் பீஸ்ட் அப்டேட் எப்போது வரும் என கேட்க, அதற்கு பதிலளித்த அவர் ”‘டாக்டர்’ படம் வெளியானதும்  பீஸ்ட் அப்டேட் வரும் “ என தெரிவித்தார். ஆனால் என்ன மாதிரியான அப்டேட் போன்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. டாக்டர் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் சூழலில், பீஸ்ட் படத்தின் அப்டேட் இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிலும் அடுத்தடுத்து 3 அப்டேட்டுகளை வெளியிட  படக்குழு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.உ அக்டோபர் 13-ந் தேதி படத்தின் நாயகி  பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது போஸ்டரை வெளியிட உள்ளார்களாம். அதையடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களான அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளிலும் பீஸ்ட் படத்தின் இரண்டு முக்கியமான அப்டேட்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பீஸ் படம் குறித்து நெல்சன் கூறுகையில் “என்னோட சினிமா வாழ்க்கையில இன்னும் எத்தனை படம் டைரக்டர் பண்ணாலும் #Beast படம் தான் என்னோட மிக முக்கியமான படமா இருக்கும்!” என தெரிவித்துள்ளார். பீஸ்ட் படம் தங்கக்கடத்தலை பின்னணியாக கொண்டது என கூறப்படுகிறது. முன்னதாக படத்தில் விஜய் ஸ்பெஷல் ஏஜெண்டாக நடிப்பதாக தகவல் வெளியானது.




பீஸ்ட் படத்தில் செல்வராகவன் ,விடிவி கணேஷ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோம், லிலிபுட் ஃபரூக்கி,  அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ச் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாளன்று  வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.பீஸ்ட் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.