இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கி அருள்நிதி  நடித்திருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். வரும் மே 26 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இன்று சென்னையில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. இயக்குனர் மிஸ்கின், பா.ரஞ்சித், பாண்டியராஜன், லிங்குசாமி ஆகியவர்கள் படத்தைப் பார்த்து தங்களது கருத்துகளை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இந்த பத்திரைகையாளர் சந்திப்பில் இயக்குனர் மிஸ்கின்(Mysskin) பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.


நடிப்பு பிசியில் மிஸ்கின்:


அண்மைக்காலங்களில் சினிமா குறித்தான முக்கியமான அப்டேட் வேண்டுமென்றால் பத்திரைகையாளர்கள் முதலில் தேடிப்போவது இயகுனர் மிஸ்கினைத்தான். மிஸ்கின் தற்போது   நிறையப் படங்களில் நடித்து வருவதால் பல்வேறு சுவாரஸ்யமானத் தகவல்களை பகிர்ந்து வருகிறார். சில தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு மென்பே மிஸ்கின் மூலமாக தெரிய வருகின்றன. அண்மையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் பற்றியத் தகவலை படக்குழு சார்பில்  வெளிவருவதற்கு முன்பாகவே பேட்டி ஒன்றில் தெரிவித்தார் மிஸ்கின்.


தற்போது கழூவேத்தி மூர்க்கன் திரைப்ப்டத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த மிஸ்கின் படத்தைப் குறித்து பாராட்டி பேசினார். மேலும் அவர் இயக்கியிருக்கும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று கேட்கப்பட்டது. பிசாசு 2 படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் படம் மிக நன்றாக வந்திருப்பதாகவும் தயாரிப்பாளர் சில சிக்கல்களை சந்தித்து வருவதால் படம் வெளியாக சற்று தாமதமாகிறது என தெரிவித்தார் மிஸ்கின்.


மாவீரன் வில்லன்:


மேலும் லியோ படத்தின் தனது படபிடிப்பு காட்சிகள் முடிவடைந்து விட்டதாகவும்  தெரிவித்தார் அவர். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மாவீரன்  படத்திலும் நடித்துள்ளார் மிஸ்கின். மாவீரன் படத்தில் தான் முக்கிய வில்லனாக நடித்திருப்பதாக தகவல் தெரிவித்தார் மிஸ்கின். மேலும் க்ளீன் ஷேவ் செய்து தற்போது தான் இருக்கும் இதே கெட் அப் இல் தான் படத்தில் நடித்திருப்பதாக தெரிவித்தார் அவர்.


மிஸ்கினைத் தொடர்ந்து கழுவேத்தி மூர்க்கன் படத்தைப் பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித் படம் கூறித்து பேசினார். அரசியல் ரீதியாக மிக நேர்மையாக படம் எடுக்கப்பட்டிருபது தனக்கு பிடித்திருந்தது எனத் தெரிவித்தார் அவர். மேலும் படம் நிச்சயம் ரசிகர்களுக்கும் நிச்சயமாக பிடிக்கும் என்று உருதியளித்தார் ரஞ்சித். தங்கலான் படத்தைக் குறித்து அவர் பேசியபோது நடிகர் விக்ரமுக்கு ஒரு சின்ன அடிபட்டுள்ளதாகவும், படபிடிப்புத் தளத்தில் இந்த விபத்து நடக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார் ரஞ்சித். விகரம் தற்போது ஓய்வு எடுத்து வருவதாகவும் விரைவில் அவர் குனமடைந்துவிடுவார் என்றும் தெரிவித்தார் இயக்குனர் பா. ரஞ்சித். வரும் 26 ஆம் தேதி கழூவேத்தி மூர்க்கன் வெளியாக இருக்கிறது.இயக்குனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்தப்  படம். அருள்நிதி மற்றும் துஷாரா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.டி இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.