ஆண்ட்ரியாவை நிர்வாணமாக ஃபோட்டோ ஷூட் செய்தேன்...இயக்குநர் மிஸ்கின் கொடுத்த ஷாக்
பிசாசு 2 படத்தில் ஆன்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க வைக்க முடிவு செய்ததாக இயக்குநர் மிஸ்கின் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மிஸ்கின்
இயக்குநர் மிஸ்கின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசியது பலரது விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பாட்டில் ராதா படத்தின் நிகழ்ச்சியில் பேசிய மிஸ்கின் பலமுறை கெட்ட வார்த்தைகளை பயண்படுத்தினார். பெண்கள் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக நடனமாடுவதை விமர்சித்தார். மேலும் குடிப்பழக்கத்தை மிகைப்படுத்தி அவர் பேசியது பலருக்கு கடும் கோபத்தை தூண்டியது. மிஸ்கின் பேசியதற்கு நடிகர் அருள்தாஸ் , லக்ஷ்மி ராமகிருஷ்ணன் , பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட பலர் விமர்சனங்களை தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து மிஸ்கின் தான் பேசியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா
நேற்று பேட் கர்ட் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மிஸ்கின் தனது கருத்துக்களுக்கு தான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் " பிசாசு 2 படத்தின் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க முடிவு செய்தேன். இதற்கான என உதவி இயக்குநர் ஈஸ்வரியை வைத்து ஃபோட்டோ ஷூட் வேலைகளை தொடங்கினோம். அந்த ஃபோட்டோஷூட் நடந்துகொண்டிருக்கும் போது நான் வெளியே வந்து சிகரெட் பிடித்துவிட்டு என் அலுவலகத்திற்கு திரும்பிவிட்டேன். அதன் பின் ஆண்ட்ரியாவுக்கு ஃபோன் செய்து உனது நிர்வாண புகைப்படத்தை நான் போஸ்டரில் வெளியிட்டால் அதை எல்லாம் என்னைப் போல் இலக்கிய நயத்தோடும் , தாய்மை உணர்வோடும் பார்ப்பார்களா என்று எனக்கு தெரியாது. அதனால் இது வேண்டாம் என சொல்லிவிட்டேன்.
Just In
நான் நினைத்திருந்தால் அந்த போஸ்டரை வெளியிட்டு என் படத்திற்கு கூட்டத்தை வர வைத்திருக்கலாம். படமும் ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனான் நான் அப்படி செய்யவில்லை. அப்படிபட்டவன் நான் இல்லை. " என மிஸ்கின் தெரிவித்துள்ளார்.