Director Mysskin : ‘தென்பாண்டி சீமையிலே..’ கமல் பர்த்டே பார்ட்டியில் பாட்டு பாடி அசத்திய மிஸ்கின்!

‘தென்பாண்டி சீமையிலே..’ என்ற பாட்டிணை கமல் பர்த்டே பார்ட்டியில் இயக்குநர் மிஸ்கின் பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது

Continues below advertisement

நடிகர் கமலஹாசனின் 68 பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று  கோலகலமாக கொண்டாடப்பட்டது. நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தநாள் காணும் உலக நாயகன் கமலுக்கு, 68 வயதாகிவிட்டது. இவரின் பிறந்தநாளையொட்டி பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

Continues below advertisement

திரை பிரபலங்கள் பலர், ஒன்று சேர்ந்து சென்னையில் உள்ள கிரின் பார்க் ஓட்டலில் பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இதில், கமலஹாசனும் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டிக்கு வந்த நடிகை பிந்து மாதவி, கமலுடன் நடனம் ஆடிய போட்டோ வைரல் ஆனது.

இந்த பார்ட்டியில், பார்த்திபன், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் மிஷ்கின், தேவி ஸ்ரீ பிரசாத், சித்தார்த், விஷ்ணு விஷால் ஆகிய  பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரும், கமலுடன் போட்டோ எடுத்துள்ளனர். பர்த்டே பார்ட்டி அன்று, மிஷ்கின் தென்பாண்டி சீமையிலே என்ற பாட்டினை பாடி அசத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, அவரின் பிறந்தநாளையொட்டி புதிய அறிவிப்பு ஒன்றை கமல் வெளியிட்டார். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பிறகு கமலஹாசன் மணிரத்னத்துடன் இணைந்து தனது 234-வது படத்தை கமல் நடிக்கவுள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். 

சில ஆண்டுகளாக, நடிப்பில் கவனம் செலுத்தாத கமல், லோகேஷ் கனகராஜின், “விக்ரம்” படத்தில் சூப்பர் கம்-பேக் கொடுத்தார். அதை தொடர்ந்து, இயக்குநர் ஹெச்.வினோத்துடனும் கைக்கோர்க்கவுள்ளார் கமல். 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola