மிஸ்கின்


இயக்குநர் மிஸ்கின் அடிக்கடி மேடைகளில் பேசி வருபவர். சினிமா நிகழ்ச்சிகளில் உணர்ச்சி வசத்தில் அந்த தருணத்தில் ரசிகர்களின் ஏற்பை பெறுவதற்காக அவர் பேசிய கருத்துக்கள் பல சர்ச்சைகளை கிளம்பியிருக்கின்றன, இப்போதெல்லாம் அவர் மேடையில் பேசுவதுடம் அவரே சர்ச்சையாக என்ன டைட்டில் வைக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களுக்கு சொல்லியும் விடுகிறார்.


சமீபத்தில் மிஸ்கின் கோயிலுக்கு போகாதீங்க சினிமாவிற்கு போங்க என்று சொன்னது ஆன்மிகவாதிகளிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தான் கூறியதற்கு விளக்கமளித்துள்ளார் மிஸ்கின்.


மிஸ்கின் விளக்கம்


நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன் . ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் வளர்ந்தவன் நான் திருமணம் செய்துகொண்ட பெண் கிறித்தவ மதத்தைச்ச் சேர்ந்தவர்.


"கோயிலுக்கு மக்கள் எப்போதும் சென்று வருகிறார்கள் ஆனால் திரையரங்குகள் தற்போது காலியாக கிடக்கின்றன. சில நேரங்களில் மேடையில் பேசும் போது ஒரு விஷயத்தை சுருக்கமாக சொல்ல தான் நேரம் இருக்கும் அப்படி சொல்வதை எடுத்துக் கொண்டு நான் பேசுவதை எல்லாம் சர்ச்சையாக்கி வருகிறார்கள்” என்று மிஸ்கின் கூறினார்


பார்த்திபனை திட்டினேனா?


தொடர்ந்து பேசிய மிஸ்கின் "இதே மாதிரிதான் நான் ஒரு முறை பார்த்திபனை என் பிறந்தநாளைக்கு என் அலுவலகத்திற்கு வர சொல்லியிருந்தேன். சின்ன பரிசு ஒன்றை கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். அவரிடம் யாரோ ஒருவர் நான் அவரை திட்டியதாக கூறியிருக்கிறார். இதை பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். நான் என்ன சொன்னேன் என்று எனக்கு நியாபகம் இல்லை ஆனால் நான் உங்களைப் பற்றி அப்படி தப்பாக ஏதாவது பேசியிருந்தால்  நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.


உங்கள் புதிய பாதை படத்தை எப்போதும் நான் கோயிலாக கும்பிடுவேன். உங்கள் படங்களில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்றை ரசிகர்களுக்கு புதிதான தரவேண்டும் என்று நினைக்கும் நீங்கள் எனக்கு கடவுள்தான் . 


என்னுடைய அலுவலகத்திற்குள் உட்கார்ந்து இளையராஜாவை , மணிரத்னம் படங்களை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. என்னுடைய இடத்தில் இருந்து நான் ஒருவரைப் பற்றி பேசுவேன். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பற்றி பேசுவதை போட்டுக்கொடுக்கும் நபரை மட்டும் நம்பாதீர்கள். அவன் ஒரு கடுமையான கோழை. நான் பேசிய அதே இடத்தில் நான் பேசியது தப்பு என்று அவன் என்னிடம் சண்டை போட்டிருந்தால் அவன் நல்லவன்.


இயக்குநர் பார்த்திபனைப் பற்றி நான் தவறாக எதுவும் பேசியதாக எனக்கு நினைவில் இல்லை. அப்படி நான் பேசியிருந்தால் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று மிஸ்கின் பேசியுள்ளார்