ஜெயம் ரவி, நயந்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பட்டாளம் நடித்து வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்தத் திரைப்படம் நடிப்பு, இசை, கதை என ரசிகர்களின் மனதிற்கு மிகவும் பிடித்துப்போனது. இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கியிருந்தார். 


இந்நிலையில், விரைவில் தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குநர் மோகன் ராஜா உறுதிபட தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக சொப்பண சுந்தரி திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மோகன் ராஜா பேசுகையில், “நானும் தம்பி ஜெயம் ரவியும் பல வேலைகளில் பிஸியாக இருக்கிறோம். இருவருக்கும் நேரம் கிடைக்கும்போது தனி ஒருவன் பாகம்-2 படப்பிடிப்பு தொடங்கும்.” என்று தெரிவித்துள்ளார்.


சொப்பன சுந்தரி திரைப்படத்தின் ட்ரெயிலர் விளையாட்டு விழாவில் வேலாயுதம், தனி ஒருவன் திரைப்படங்கள்ன் இரண்டாவது பாகம் வெளியாகுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த  மோகன் ராஜ்,” இந்தாண்டு இல்லையென்றாலும், அடுத்த ஆண்டில் வெளிவர வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.