Mari Selvaraj: 'நான் படம் பண்றது யாருக்காக?' மனம் உருகி பேசிய மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய திரைப்படங்கள் யாருக்கானது? அதன் கதைக்களம் என்ன? என்பது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் கர்ணன், மாமன்னன், வாழை படங்கள் மூலமாக முன்னணி இயக்குனராக முன்னேறியுள்ளார்.

Continues below advertisement

யாருக்காக இந்த படம்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வாழை படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வாழை படத்தின் வெற்றி விழாவில் பேசிய மாரி செல்வராஜ், “ ஒவ்வொரு படத்திலும் நான் சொல்கிறேன். நான் படம் பண்ணுவதே எனது ஊர்க்காகத்தான் பண்றேன். என் ஊர் மக்களை அங்கிருந்து வெளிய கொண்டுவரத்தான் பண்றேன். எல்லா மேடையிலும் என் ஊர் மக்கள் கொண்டாடப்படுவதும், எல்லா படத்துலயும் அவங்க விருது வாங்குவதை காட்டிலும் எனக்கு என்ன சந்தோஷம் இருக்கப்போது. இது மிகப்பெரிய சந்தோஷம் எனக்கு.

பரியேறும் பெருமாள் அங்கதான் பண்ணேன். கர்ணன் அங்கதான் பண்ணேன். மாமன்னன் அங்கதான் பண்ணேன். வாழை அங்கதான் பண்ணேன். இப்போ பண்ணிக்கிட்டு இருக்குற பைசன் அங்கதான் பண்ணிகிட்டு இருக்கேன். அவ்ளோ கதைகள் இருக்குது. ஏன் இவன் அங்கயே போறானா? அவ்ளோ கதைகள் இருக்குது. அந்த கதையில அவங்க எனக்கு சப்போர்ட் பண்றாங்க.

எளிமையான உண்மை:

பெருசா எல்லாம் ப்ளான் பண்ணல.. எளிமையான உண்மை எங்ககிட்ட இருக்குது. எளிமையான உண்மையை கலையாக்க கஷ்டப்பட்றேன். எளிமையான உண்மையை எடுத்து வைக்குறேன். நான் எடுப்பது எளிமையாதான் எடுப்பேன். ஒரு எளிமையான உண்மை தமிழ் சமூகத்தை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துது என்பதை படம் ரிலீசான பிறகு புரிஞ்சுக்குறேன். வலியதை விட எளியது மிகப்பெரிய மதிப்பு இருக்கு அப்படிங்குறதை ஒவ்வொரு படத்துல இருந்தும் புரிஞ்சுகுறேன்.

அப்படி எளிமையான கதையை எனக்கு கொடுத்துக்கொண்டே இருக்கக்கூடிய என் ஒட்டுமொத்த மக்களுக்கு, என் கிராம மக்களுக்கு கொடியங்குளம் மக்களுக்கு பக்கத்தில் உள்ள கொல்வராய குறிச்சி, கருங்குளம் என எல்லா மக்களுக்கும் நன்றி சொல்லிக்குறேன். என்னுடைய எல்லா படைப்புலயும் அவங்க இருப்பாங்க.. அவங்கதான் நான். நான்தான் அவங்க. அதுனால ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்றி சொல்லிக்குறேன்”

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்தார். மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தை பொதுமக்கள், ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பாராட்டினர். தற்போது மாரி செல்வராஜ் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன்  படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், அழகம்பெருமாள், பசுபதி, லால் என பலர் நடிக்கின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola