மாரி செல்வராஜ் இயக்கி கபடி விளையாட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக தான் இயக்கவிருக்கும் படங்களைப் பற்றி பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது இன்பநிதி நாயகனாகும்  படத்தை இயக்கப்போவதை அவர் உறுதிபடுத்தியுள்ளார். 

Continues below advertisement

இன்பநிதி படத்தை இயக்குவது பற்றி மாரி செல்வராஜ் 

பைசன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்தபடியாக தனுஷ், கார்த்தி, இன்பநிதி ஆகியோரின் படங்களை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த படங்களுக்கான கதை அவரிடம் ஏற்கனவே இருந்ததா அல்லது படத்தை ஓக்கே செய்துவிட்டு பிறகு கதையை முடிவு செய்கிறாரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மார் செல்வராஜ்  " பைசன் படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக தனுஷ் படத்தை இயக்கவிருக்கிறேன். இப்படத்தின் கதையை கர்ணன் படத்தின் போதே சொல்லிவிட்டேன். இவர்கள் எல்லாரும் என்னிடம் கதை இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள். எனக்கு கதைகள் பிரச்சனை கிடையாது. வாழ்வும் புரிதலும் தான் கதைகள். எந்த சம்பவத்தையும் எங்கிருந்து வேண்டுமானால் கொண்டு வந்து இன்றைய மனிதர்களுக்கு தேவையான வகையில் சினிமா என்கிற கலை வடிவத்தில் சொல்வது தான் முக்கியமான வேலை.  அதை என்னால் செய்ய முடியும் என்று இவர்கள் எல்லாரும் நம்புகிறார்கள். அவர்களுக்கு தகுந்த மாதிரியான கதைகளை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இவர்கள் அனைவருக்குமே நான் முன்பே கதை சொல்லிவிட்டேன். இதுதான் கதை , இதுதான் பின்புலம் என்று எல்லாம் சொல்லி அவர்கள் ஓக்கே இதை நாம் பண்ணலாம் என்று சொன்னபிறகே நான் அடுத்தகட்டத்திற்கு நகர்வேன். படத்தை ஓக்கே செய்துவிட்டு பிறகு நான் சொல்லும் கதை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆகிவிடுவேன்." என மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார். 

தனுஷ் படத்தைத் தொடர்ந்து இன்பநிதி , கார்த்தி நடிக்கும் படங்களை இயக்கவிருப்பதை கிட்டதட்ட தனது பதிலில் உறுதிபடுத்தியுள்ளார்.