தக் லைஃப் தோல்வி குறித்து மணிரத்னம்
நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து கமல் மணிரத்னம் கூட்டணியில் வெளியான படம் தக் லைஃப். த்ரிஷா , சிம்பு , அசோக் செல்வன் , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் , வடிவுக்கரசி , என பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சினிமா ரசிகர்களால் கிளாசிக் படமாக நாயகன் இன்றளவும் கிளாசிக் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.
ஏற்கனவே மணிரத்னம் படங்களில் பல முறை பேசப்பட்ட கதைக்களம். தெளிவில்லாத கதாபாத்திர வடிவமைப்பு என படத்தில் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. மணிரத்னம் படங்களில் மிகப்பெரிய பலமாக கருதப்படுபவை பாடல்களின் காட்சியமைப்புகள். ஆனால் இந்த படத்தில் பாடல்கள் கதைக்கு பொருத்தமே இல்லாமல் துண்டுதுண்டாக இடம்பெற்றிருந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தக் லைஃப் திரைப்படம் தோல்வியை தழுவியது. கமலின் முந்தைய படமான இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து தற்போது தக் லைஃப் படமும்ம் சமூக வலைதளத்தில் ட்ரோல் மெட்டிரியலாக மாறியது. இப்படியான நிலையில் தக் லைஃப் படத்தின் தோல்வி குறித்து பிரபல தனியார் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இயக்குநர் மணிரத்னம் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இன்னொரு நாயகன் வேண்டாம்
கமல் மற்றும் என்னிடம் இன்னொரு நாயகன் படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு சாரி. நாங்கள் பின்னோக்கி செல்ல விரும்பவில்லை. நாயகனை விட வேறுபட்ட ஒரு கதையை தான் கொடுக்க நினைத்தோம். நாங்கள் டெலிவர் செய்ததை விட முற்றிலும் வேறொரு எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது தான் பிரச்சனை" என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.