நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு, பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 


நடிகர் சந்தீப் நடித்துள்ள மைக்கல் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு படமாகும். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள பி.எஸ்.ஜி. என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சந்தீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பினர். 


இதற்கு பதல் அளித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “அதைப்பற்றி நான் எதுவும் பேசவில்லை. ஆனால் இன்று என் கல்லூரிக்கு வந்துவிட்டு அப்டேட் சொல்லாமல் போனால் எப்படி? சின்ன ஹிண்ட் மட்டும் தருகிறேன். பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். இந்தப் படத்திற்கு சப்போர்ட் பண்ணுங்கள்.  அடுத்த படத்தைப் பற்றி கொஞ்ச நாள் கழித்து பேசலாம்” எனத் தெரிவித்தார். இதற்கு மாணவர்கள் விசில் அடித்து கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.




கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ”வாரிசு படம்வெளியாவதை ஒட்டி தளபதி 67 அப்டேட் எதும் கொடுக்காமல் இருந்தோம். தற்போது படம் வெளியாகிவிட்டது. இன்னும் 10 நாட்களில் தளபதி 67 அப்டேட் வரும். அதன் தொடர்ச்சியாக அப்டேட்கள் வரும். படம் வெளியாவது பொங்கலுக்கா? தீபாவளிக்கா? என்பது இன்னும் முடியவில்லை. சூட்டிங் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்து இருந்தார்.


தமிழ் சினிமாவில் தற்போது இரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படம் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படம். இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் இயக்குநர் லோகேஷ் கனகரான், இரண்டாவது முறையாக நடிகர் விஜய் உடன் இணைந்து இருப்பதால் படம் ஆரம்பிக்கும் முன்பாக எக்கசக்க எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது எழுந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கடைசி படமான விக்ரம், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்திருந்தது. வாரிசு படம் வெளியான நாளிலிருந்தே தளபதி 67 குறித்து விஜய் இரசிகர்கள் சமூக வலைதளங்களில் அப்டேட் கேட்டு வருகின்றனர். இந்த சூழலில் கோவைக்கு கல்லூரி நிகழ்வில் கலந்துக் கொள்ள வந்த போது தளபதி 67 என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 அப்டேட் குறித்து அப்டேட் தந்திருப்பது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண