இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீஸ் ஆகி 18 நாட்களை கடந்து வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே படம் குறித்த விமர்சனங்கள் கலவையாக வந்த போதிலும் ரசிகர்கள் ஆதரவை பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடன் தியேட்டரில் கூலி படம் பார்த்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு ஏற்ற மாஸ் குறையாத படத்தை தந்திருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். கூலி திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்று ரஜினி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ரசிகர்கள் முன்பு நடந்த இந்த பேட்டியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். கூலி திரைப்படத்தில் பிளாஸ்பேக் காட்சிகள் வரும் அந்த காட்சியில் ரஜினியின் முகத்தை டீன் ஏஜ் பண்ணிட்டோம். அவரோட குரல் AI தொழில்நுட்பத்தில் காெண்டு வந்தோம் என்ற போது ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பினர். மேலும் AI என்பது ஒரு ரெபரன்ஷ்க்காக வைத்துக்கொள்வேன். நாம ஒரு ஐடியா கிடைக்கும் போது அதை ட்ரை பண்ணி பார்ப்பது ஒன்றும் தவறு கிடையாது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், மாஸ்டர், லியோ, கூலி போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த காம்போவில் உருவான படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கின்றன. பாட்டுகளும் டிரெண்டிங்காகி வருகிறது. அனிருத் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், வரும் காலத்தில் அனிருத் இல்லாமல் படம் பண்ணமாட்டேன். இரண்டு பேரில் யாராவது ஒருத்தர் சினிமாவை விட்டு விலகி சென்றால் அடுத்ததை பற்றி யோசிக்கலாம் என அவர் நச் என பதில் அளித்தார்.

Continues below advertisement