நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போனதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் :
கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜய், நடிகை மாளவிகா மேனன் நடிப்பில் வெளியான படம் “மாஸ்டர்”. இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு,கௌரி கிஷன், சஞ்சீவ், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக திரைத்துறை கடும் நஷ்டத்தை சந்தித்தது. திரைத்துறையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு என்னென்னவோ முயற்சிகள் செய்தும் மக்கள் நோய்தொற்று காரணமாக தியேட்டருக்கு வர தயங்கினர்.
ஆனால் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வந்து மீண்டும் திரையுலகை மீட்டெடுத்ததில் மாஸ்டர் படத்தின் பங்கு மிகப்பெரியது. விஜய் - விஜய் சேதுபதி கூட்டணியும், அனிருத்தின் துள்ளலான இசையும் படம் மெஹா ஹிட் அடிக்க காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது 67வது படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி சேர உள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் :
இந்நிலையில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையேயான அரையிறுதி போட்டியின் போது கமெண்டரி நிகழ்வில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது முன்னாள் இந்திய அணி வீரரும், கிரிக்கெட் தொகுப்பாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஆர்.ஜே.பாலாஜி அவரைப் போல் பேசி காட்டியதோடு நான் இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை தெரிவித்துக் கொள்கிறேன். லோகேஷ் எடுத்த மாஸ்டர் படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது என்பதை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற கல்லூரி முதல்வர் கேரக்டரில் அவரும் எங்கள் தேர்வாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சில காரணங்களால் அது நடிக்க முடியாமல் போய்விட்டது என கூறினார். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.