தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், ஏழாம் அறிவு, சிங்கம் என தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த சூர்யாவிற்கு திரைவாழ்வில் மிகப்பெரிய சறுக்கலை உருவாக்கிய திரைப்படம் அஞ்சான்.
அஞ்சான் ரீ ரிலீஸ்:
இயக்குனர் லிங்குசாமியின் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய படம். ஆனால், ரசிகர்களை திருப்திப்படுத்தாத காரணத்தால் இந்த படம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், அஞ்சான் படம் நாளை மறுநாள் ( 28ம் தேதி) ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் குறித்து இந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமி பேசியதாவது, இது ரீ எடிட் பண்ணுவதற்கு காரணமே என்னவென்றால், 11 வருடத்திற்கு முன்பு இந்த படம் முதன்முறையாக அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம். முதன்முதலில் சிக்கியது நம்மதான்.
புரட்டிப் போட்ட படம் பண்ணல:
இப்போது, உண்மையாக ரசித்த ஒரு சிலர் ஏன் சார் இந்த படத்தை இப்படி திட்டுனாங்க? எனக்கு இந்த படம் பிடிக்கும் சார். எனக்கு பிடிக்கும், எனக்கு பிடிக்கும்னு தனித்தனியாக நிறைய பேர் சொல்லிட்டாங்க.
சின்ன பையன் இருந்தான் என்றால் இவன் இந்த படத்தை 5 முறை பார்த்திருக்கிறான் சார். ஸ்டிக்கை வாயில் வைத்து எடுப்பான் சார். நானே இந்த படம் யோசிச்சப்பட்ட நான் சின்ன வயசா இருந்தப்ப யோசிச்சு பண்ணது. இது உலக மகா கதை அப்படி புரட்டிப் போட்ட படம்னு பண்ணல.
முதன்முதலில் நம்மை அடிச்சவங்க தயவுதாட்சனமின்றி எல்லாரையும் அடிக்கிறார்கள். உன்னை விட நான் எவ்ளோ கெட்ட வார்த்தை பயன்படுத்துறேன் அப்படிங்குற அளவுக்கு இறங்கிட்டாங்க. எனக்கு பயமே இல்லை. 11 வருஷத்துக்கு முன்னாடி இருந்ததை விட பெரிய கெட்டவார்த்தையே அவர்கள் பயன்படுத்தப் போவது இல்லை.
மாயை உலகம்:
இப்பவும் சிலர் டேய் நீ மறுபடியும் தோக்குறதுக்கு ரிலீஸ் பண்றியானு போட்றாங்க. இது வெற்றி, தோல்விக்காக யோசிச்சு வரல. ரசிகர்கள்கிட்ட இருந்து வந்த கருத்துக்களை வச்சு எடிட் பண்ணி ரிலீஸ் பண்றோம். ஒரு டைம் பத்தல.
ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் பண்ணலாம்னு ஒப்பந்தம் போட்டோம். முதல் பாதி - இரண்டாம் பாதி சேர்ந்து பாக்கக்கூட எனக்கு நேரம் இல்லை. என் நண்பர்களுக்கு போட்டு காட்டினேன். தொடர் வெற்றியில் இருக்கும்போது பிரச்சினை என்னவென்றால், இவருக்கு தெரியாததா? இத்தனை ஹிட் கொடுக்குறாரு? அப்படினு பேசாம போயிடுவாரு. இது ஒரு மாயையான உலகம்.
நாங்களும் தவறு செய்துள்ளோம்:
ஒரு மிக சரியான படம் வந்தா, இந்த படம் இல்லாம ஒரு டார்கெட் பண்ணி ட்ரோல் பண்ணுன படமா ரன், சண்டைக்கோழி இருந்திருந்தால், இவங்க என்ன பண்ணியிருந்தாலும் படத்தை நிறுத்தியிருக்க முடியுமா? மக்கள் பார்த்துக்கொண்டே இருந்திருப்பார்கள். நம்மளும் சின்னதாக தவறு செய்திருக்கிறோம். 100 சதவீதம் ஒப்புக்கொள்கிறேன். 100 சதவீதம் சரியான படத்தை பண்ணிட்டு, அதை எல்லாரும் திட்றாங்கனு நான் பழிபோட விரும்பவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
லிங்குசாமி இயக்கிய இந்த படத்தில் சூர்யாவுடன் சமந்தா, வித்யுத்ஜமால், மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடித்திருப்பார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருப்பார். அந்தோணி எடிட் செய்திருப்பார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார். திருப்பதி ப்ரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்திருப்பார்.