இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் “ஜிகர்தண்டா” . இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, அம்பிகா, சங்கிலி முருகன், கருணாகரன், விஜய் சேதுபதில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் வித்தியாசமான கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இதில் அசால்ட் சேது என்னும் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது.
இயக்குநராக வரவேண்டும் என்ற கேரக்டரில் நடித்திருந்த சித்தார்த்தும் எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இன்றளவும் தமிழில் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” எடுக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முதன்மை கேரக்டர்களில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் கதை 1975 ஆம் ஆண்டில் கதை நடப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதில் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யாவும், கேங்ஸ்டர் ஆக ராகவா லாரன்ஸூம் நடித்துள்ளனர். இது ‘பான் இந்தியா வெஸ்டர்ன்’ படம் என்னும் கேப்ஷனோடு வெளியாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் முரட்டுத் தனமான கேரக்டரில் வருவதால் கண்டிப்பாக பாபி சிம்ஹாவின் நடிப்பை ஈடு செய்வார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Thalaivar 171: "போட்றா வெடிய” .. லோகேஷ் கனகராஜூடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!