பாலியல் வன்கொடுமையால் 6 மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். ஒரு சில மாதங்களுக்கு பின்னரே சிறுமி கர்ப்பமானது பெற்றோருக்கு அந்த சிறுமிக்கும் தெரிய வந்தது. இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்தவரை கைது செய்தனர்.


இந்நிலையில், 6 மாத கர்ப்பிணியான அந்த சிறுமியின் பெற்றோர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், தங்கள் மகளின் உடல்நிலை மோசமாக இருப்பதால் கர்ப்பத்தை கலைக்கவேண்டும் என்று கோரப்பட்டது.


இந்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவில், "'சிறுமியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் உயிருடன் இருந்தால், குழந்தைக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை மருத்துவமனை உறுதி செய்யும். மனுதாரர் குழந்தையின் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்றால், மாநிலமும் அதன் அமைப்புகளும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு குழந்தைக்கு மருத்துவ உதவி மற்றும் வசதிகளை வழங்க வேண்டும் “ என்று உத்தரவிட்டார். 


சட்டம் சொல்வது என்ன..? 


1971 ஆம் ஆண்டின் மருத்துவக் கருவுறுதல் சட்டம், 24 வாரங்கள் ஆன கருவை கலைக்க நீதிமன்றங்கள் அனுமதிப்ப தில்லை. ஆனால், இந்த வழக்கில் சிறுமியின் உடல்நி லையை கருத்தில் கொண்டு கேரள உயர் நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண