சூர்யாவை வைத்து பான் இந்தியா படத்தை எடுப்பீர்களா என்ற கேள்விக்கு இயக்குநர் ஹரி பதிலளித்துள்ளார்.


ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த படம்  ‘அருவா’. இந்தப்படம் சில காரணங்களால் நடக்க முடியாமல் போனது. இந்த நிலையில் அருவா படத்தின் கதையைத்தான் ஹரி அருவா என்ற பெயரில் இயக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.


 






இது குறித்து ப்ரஸ் மீட் ஒன்றில் ஹரியிடம் கேட்ட போது, “ அந்தத்தகவல் முற்றிலும் பொய்யானது. யானைப்படக்கதையும், அருவாப்படக்கதையும் ஒரே கதை இல்லை. அருவா படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது” என்றார்.


பான் இந்தியா படம்


இந்த நிலையில் இந்தப்படம் மீண்டும் உருவாக்கப்பட்டால் அது பான் இந்தியா படமாக இருக்குமா என்று கேட்டபோது,  “ பான் இந்தியா படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணோத்தோடு மட்டும் நான் ஒரு படத்தை இயக்க மாட்டேன். நான் அதைப்பற்றி யோசித்தால் நேர்மையான எனது திரைக்கதையில் இருந்து நழுவ வாய்ப்பு இருக்கிறது. நான் கதைக்கு  பின்னால் போக விரும்புகிறேன். அந்தக்கதைக்கு ஏற்றவாறு தான் திரைக்கதை அமையவேண்டும். அந்தக்கதையின் மேக்கிங் ஸ்டைலுக்கு ஏற்றவாறு கலைஞர்கள் அமைய வேண்டும். இப்படி இல்லாமல் நான் ஹிந்திக்காகவோ அல்லது அங்கிருந்து வரும் நடிகருக்காக காட்சிகளில் மாற்றத்தை கொண்டு வந்தால் அது படத்தின் மார்க்கெட்டை அதிகப்படுத்துவதற்காக மட்டுமே இருக்கும்.  அது சரியாக இருக்காது. 


ஆனால் ஒரு படத்தை இந்தியா முழுமைக்கும் சந்தைப்படுத்தலாம். யானை படத்தை கூட பிற மொழிகளில் நாங்கள் டப் செய்து வெளியிட்டு இருக்கிறோம். என்னுடைய நம்பிக்கை, ஒரு கதை நன்றாக இருந்தால் அது எந்த வழியிலாவது ஹிந்தியை அல்லது வேறொன்றையோ அடைந்து விடும்” என்றார். 


தகவல் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா