வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி...கெளதம் மேனன் தான் டைரக்டரா !
வெற்றிமாறனின் கதையில் ஜெயம் ரவியை இயக்கவிருப்பதாக இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்

கெளதம் மேனன்
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , வாரணம் ஆயிரம் , விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் தற்போது மலையாளத்தில் மம்மூட்டி நடித்துள்ள Dominic and the Ladies Purse' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஜனவரி 23 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்
ஜெயம் ரவி கெளதம் மேனன் கூட்டணி
ஜெயம் ரவி நடித்து சமீபத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கமே ஜெயம் ரவிக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்தபடியாக ஜீனி , எஸ்.கே 25 என அவரது படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்த படத்தை கெளதம் மேனன் இயக்கவிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை இரண்டு பாகங்களில் கெளதம் மேனன் நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
Just In




தொடர் வெற்றிப்படங்களைக் கொடுத்த கெளதம் மேனனின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவின. என்னை நோக்கி பாயும் தோட்டா , துருவ ந்ட்சத்திரம் ஆகிய படங்கள் தயாரிப்பு ரீதியாக சிக்கல்களை சமாளித்தார். தற்போது மலையாளத்தில் முதல் படத்தை இயக்கியிருக்கும் கெளதம் மேனன் தமிழ் தெலுங்கு என இரு சினிமாத் துறைகளிலும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்