முன்னதாக 2018 ஆம் ஆண்டில், நடிகர் தனுஷ் இயக்குநராக தனது இரண்டாவது படத்தை நாகார்ஜுனா, அதிதி ராவ் ஹைதாரி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முன்னிலையில் தொடங்கினார். பின்னர் 2017 ஆம் ஆண்டில், 'பா பாண்டி' மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமான பிறகு அவரது இரண்டாவது படத்தின் இயக்கம் கைவிடப்பட்டதாக செய்திகள் வந்தன. தனுஷ் இந்த திட்டத்தை மீண்டும் தொடங்குவார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது விஜய் டிவி புகழ் ராமரை கொண்டு தனுஷ் ஒரு படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பா. பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் தான் இயக்கும் அடுத்த படம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் என்று கடந்த 2021 ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், விரைவில் தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கப்போவது யாரு ராமர் நடிக்க இருப்பதாகவும், ஒரு சில காட்சிகளில் ரோபோ சங்கர் தோன்ற இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் ரோபோ ஷங்கர் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் பாலிவுட் திரைப்படமான `அத்ரங்கி ரே’வில் நடித்த நடிகர் தனுஷ் அடுத்தடுத்து `மாறன்' படத்தையும் ஒடிடி தளத்தில் வெளியிட்டார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து, , `தி க்ரே மேன்’, `திருச்சிற்றம்பலம்’, `நானே வருவேன்’, `வாத்தி’ முதலான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவற்றுள் `தி க்ரே மேன்’ நடிகர் தனுஷ் நடித்துள்ள இரண்டாவது ஹாலிவுட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நடிகர் தனுஷ் இயக்குநர் கனவு பற்றி பேசும்போது, உண்மையில், எனக்கும் படம் இயக்குவதில் அதிக ஆர்வம் உள்ளது. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு அற்புதமான ஸ்கிரிப்ட் என்னிடம் உள்ளது, அதை விரைவில் செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்