போஸ் வெங்கட் 


இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் சினிமா நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி வருபவர். நடிகர் விஜய் சமீபத்தில் கட்சித் தொடங்கியபோது அவரை விமர்சித்தவர்களில் போஸ் வெங்கட் ஒருவர். தவெக மாநாட்டின் போது விஜயின் உரை மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார் , எழுதி கொடுத்து பேசுகிறார் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பேசியிருந்தார். சுர்யாவின் கங்குவா இசை வெளியீட்டில் பேசியபோது ஒரு நல்ல தலைவன் தனது ரசிகர்களுக்கு படிப்பறிவை கொடுப்பவன் தனது ரசிகர்களை முட்டாள்களாக வைத்திருப்பவன் இல்லை என பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் போஸ் வெங்கட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள வீடியோ ஒன்று விஜய் ரசிகர்களின் கையில் சிக்கியுள்ளது.


சாதிப்பெயரை பெருமையாக சொன்ன போஸ் வெங்கட்  


விடுதலை 2 படத்திற்காக தெலுங்கு யூடியூப் சேனலில் நேர்காணல் ஒன்றில் பேசிய போஸ் வெங்கட் இப்படி கூறினார் " நான் ஒரு தெலுங்கன் , நான் நாயுடு , என்னுடைய தாய்மொழி தெலுங்கு தான். ஆனான் எனக்கு 8 வயது இருக்கும் போது நான் சென்னைக்கு வந்துவிட்டேன். அதனால் தெலுங்கு என் ரத்தத்தில் இருக்கிறது . ஆனால் என்னால் தெலுங்கு பேச முடியாது. அதனால் எனக்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது." என அவர் பேசியுள்ளார்






தொடர்ந்து விஜயை , இன்னும் சில அரசியல் கட்சிகளை விமர்சித்து திமுகவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்து வரும் போஸ் வெங்கட் தனது சாதியை பெருமையாக பேசுவதை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். 




மேலும் படிக்க : சொன்னதை மீறி ஷோ காட்டிய அல்லு அர்ஜூன்; கைது செய்தது ஏன்? ரேவந்த் ரெட்டி ஆவேசம்!


புடவை கட்டுவது ஒரு மேட்டரா...தெலுங்கு ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் தமிழ் ரசிகர்கள்