தவெக மாநாட்டில் விஜய்


இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்று அவரது ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் மற்ற அரசியல் கட்சியினரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். த.வெ.க.வின் கொள்கைகள், செயல்திட்டங்களை கூறிய விஜய், தான் அரசியலுக்கு வருவதன் காரணம்? தன்னுடைய அரசியல் எதிரி யார்? தன்னுடைய நிலைப்பாடு என்ன? என்று விளக்கமாக கூறினார். பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் எதிராக தான் அரசியலை முன்னெடுக்கப் போவதாக கூறியிருப்பதுடன் பல கருத்துக்களையும் கூறினார். 


மேடையில் விஜய் பேசியது உணர்ச்சிவசமாகவும் அதே நேரம் ரசிகர்களை கவரும் விதமாக நகைச்சுவையாகவும் இருந்தது. ஒரு சில நேரங்களில் திரைப்பட வசனங்களைப் போல் விஜய் மூச்சுவிடாமல் உணர்ச்சியின் உச்சத்தில் இருந்து பேசினார். அவர் பேசியது குறித்து பலர் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் . சில இந்த மாநாட்டை பார்த்தது இந்தியன் 2 படம் பார்த்தைவிட சிறப்பான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்கள். தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் போஸ் வெங்கட் கருத்து தெரிவித்துள்ளார்.


விஜய் உரை பற்றி போஸ் வெங்கட்


முன்னதாக விஜய் கட்சித் தொடங்கியபோது போஸ் வெங்கட் விஜயின் அரசியல் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். சூர்யாவின் கங்குவா இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர் ஒரு தலைவன் என்பது தனது ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்க மாட்டான். சூர்யா நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசியிருந்ததும்  பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து போஸ் வெங்கட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.." என போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்