தன்னுடைய எதிர்கால நிலை கருதி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது நல்ல முடிவு என இயக்குநர் பாரதி கண்ணன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

ட்ரெண்டான பாரதி கண்ணன்

சமூக வலைத்தளங்களில் நடிகரும், இயக்குநருமான பாரதி கண்ணன் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார். தமிழில் அருவா வேலு, கண்ணாத்தாள், திருநெல்வேலி, ஸ்ரீராஜ ராஜேஸ்வரி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அவர், நடிகராகவும் பிரபலமானவர். அப்படியான ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் பாரதி கண்ணனிடம், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி வரவில்லை. ஆனால் அவருடன் நடித்த ரோஜா அரசியலுக்கு வந்து அமைச்சராகி விட்டாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அது விதியில் எழுதப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வாங்கியிருக்கிறாரே அதனை எல்லாரும் பெற்று விட முடியுமா சொல்லுங்கள். ஆனானப்பட்ட கமல்ஹாசனே சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கினாலும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு அடுத்த இடத்தில் தானே இருக்கிறார். பிரதமரை சந்திக்க ரஜினிகாந்த அப்பாயின்மென்ட் கேட்டால் உடனே கொடுக்கிறார்கள்.

Continues below advertisement

அந்த அளவுக்கு அவர் பெரிய சாதனைப் படைத்தவர். ரஜினி ஒரு ஞானி, அவரை எப்படி சாதாரணமாக எடை போட முடியும். ரோஜாவும், ரஜினியும் ஒன்றாகி விட முடியாது. ரஜினிகாந்த் பெரிய சித்தர். அவர் ஒரு வேகத்தில் அரசியலுக்குள் இறங்கி விட்டார். ஆனால் பின்விளைவுகள் பற்றி யோசிக்கிறார்.

ரஜினிகாந்த் ஒரு ஞானி

அரசியல் வாழ்க்கையில் நாம் பொய் சொல்ல வேண்டியிருக்கும், எப்படி சமாளிக்கப் போகிறோம், உண்மையா வாழ முடியுமா, அதனால் கூட இருப்பவர்களை திருப்திப்படுத்த முடியுமா, வயதாகி விட்டதால் உடல்நிலை கவனம் செலுத்த வேண்டியுள்ளது, மக்களை ஏமாற்றி வரக்கூடாது என்று யோசித்து அரசியலில் இறங்க வேண்டாம் என ஒரு ஞானியாக யோசித்து முடிவெடுத்தார். சாதாரண ஆளாக இருந்தால் நிச்சயம் இப்படி முடிவெடுக்க மாட்டார்கள். பின்னால் நடக்கப்போவது அவருக்கு தெரிந்து விட்டது. அதனால் முதல் அடி எடுத்து வைத்தவுடன் பின்வாங்கி விட்டார். ரஜினியைப் பொறுத்தவரை நல்ல முடிவு எடுத்து விட்டார்.  

அதேசமயம் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு எல்லாம் வயதாகி விட்டது. இது இயற்கையான ஒன்று. அரசியலில் அவர்களுக்கு இதுதான் மைனஸாக அமைந்து விட்டது. ஆனால் விஜய்க்கு வயது இருக்கிறது. இதுவே ரஜினி, கமல் இருவரும் 50 வயதில் வந்திருந்தால் பிரகாசிக்க வாய்ப்பிருந்திருக்கும் என்று தான் பலரும் நினைத்தார்கள் என பாரதி கண்ணன் கூறியுள்ளார்.