நடிகரும் , இயக்குநருமான பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக இருந்தவர். அவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியுடன் பழகிய அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இதெல்லாம் மறக்க முடியாத ஒரு சமாசாரம் என தொடங்குகிறார் இயக்குநர் பக்கியராஜ் அதில் “ சிவாஜி சார் என்னிடம் எத்தனை மணிக்கு பாக்கி ஷூட்டிங் என கேட்டார், நான் 7.30 மணிக்கு என சொன்னேன். அடுத்த நாள் அவருக்கான ஷார்ட் எல்லாம் லைட் செய்துவிட்டு , ஒரு 5 நிமிடங்கள் இருந்தது.


ஒரு கொடி பறப்பதற்கான காட்சியை எடுக்க வேண்டும் என்பதால் முன்னதாகவே  எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது சிவாஜி வந்ததை நான் கவனிக்கவில்லை. ஷார்ட் எடுத்து முடித்ததும் சிவாஜி நின்றுக்கொண்டிருந்தார். வணக்கம்ணே என்றேன். என்ன எத்தனை மணிக்கி பாக்கி வர சொன்னே ! என கேட்டார். அண்ணே 7.30 என்றேன். அப்புறம் ஷூட் எடுத்துக்கிட்டு இருக்க ,என்றார். அண்ணே இது கொடி பறக்குறமாதிரி ஷார்ட் , நீங்க வற்றதுக்கு முன்னதாக எடுத்திடலாம்னு எடுத்தேன். உங்களுக்காகத்தான் லைட்.லாம் செட் பண்ணி வச்சிருக்கேன் என்றேன்.


சரி இங்க 2000 பேர் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காங்க..பாக்கி சீக்கிரம் வந்துட்டான் , அண்ணே லேட்னு சொல்லமாட்டாங்களா என்றார். அடுத்த நாள் எனக்கு முன்னதாகவே சிவாஜி கிளம்பிவிட்டார். நான் அடித்து பிடித்து கிளம்பினேன் . ஷூட்டிங் ஸ்பார்ட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அண்ணே என்ன சீக்கிரமா வந்துட்டீங்க என கேட்டேன். உடனே அவர் என்ன ஃபோர்ட் காரா புதுசா? என கேட்டார். நான் மறுபடியும் என்னண்ணே என கேட்க . பார்த்தியா உன்னை பழி தீர்த்துட்டேன். நேத்து நீ சிக்கிரமா வந்த , இன்னைக்கு பாக்கியராஜ் லேட்டுனு தெரிய வேண்டாம் என்றார் சிவாஜி “ என்கிறார் பாக்கியராஜ்.


 





மற்றொரு சுவாரஸ்யமாக “ தாவணி கனவுகள் படம் எடுத்ததும் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார் , அவருக்கு போட்டுக்காட்ட வேண்டும் என அனுமதி கேட்டிருந்தேன் .அவர் மாலை 6 மணிக்கு நடிகர் சங்கத்திற்கு வந்துவிடுகிறேன் என்றார்.அவர் எப்போதுமே அதைத்தான் விரும்புவார். அதே நேரம் மதியம் ஷோவிற்கு சிவாஜி சாரை கேட்டிருந்தேன். அவர் சம்மதம் சொன்ன பிறகுதான் மாலை நேரத்தை எம்.ஜி.ஆரிடம் கேட்டுப்பெற்றேன். ஆனால் சிவாஜி உடனே கால் செய்து , நான் மாலை 6 மணிக்கு படம் பார்க்க வருகிறேன் என்றார். எனக்கு பக் என இருந்தது.


நான் எவ்வளவோ சொல்லி பார்க்கிறேன் சிவாஜி மாலைதான் வருவேன் என்கிறார். இருவரையும் நான் வரவேற்றாக வேண்டும் என்பதால் என்ன செய்வது என புரியவில்லை. நான் எம்.ஜி.ஆரை வரவேற்றுக்கொள்கிறேன் , நீ சிவாஜியை வரவேற்று அமர வை  , இடையில் நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் என பூர்ணிமாவிடம் சொல்லிவிட்டு , நான் எம்.ஜி.ஆருடம் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். இடையில் எம்.ஜி.ஆரிடம் சார் லேபில் ஒரு வேலை போயிட்டு வற்றேன் என்றேன் . என்ன வேலை என்றார், சின்ன கரெக்‌ஷன் என்றேன் .. இப்போ கரெக்‌ஷன் செய்து எப்போது படத்தை ரிலீஸ் பண்ணுவ  நாளைக்கு படம் ரிலீஸ்தானே ..உண்மைய சொல்லு என்றார். நடந்ததை சொன்னேன்..அட அறிவிருக்காப்பா உனக்கு ..அவர்தான் உன் ஹீரோ அவரை போய் கவனி , நாளைக்கு தோட்டத்துல பார்த்துக்கலாம் . என்றார் எம்.ஜி.ஆர், உடனே சிவாஜியிடம் சென்று லேபில் சின்ன வேலை என்றேன் ..அவர் எனக்கு தெரியும்டா..என்ன துரத்தி விட்டாரா என்றார் சிரித்தப்படி ... “ என இருவருக்கும் இடையிலான புரிதலை கண்டு தான் வியந்ததாக தெரிவிக்கிறார்  பாக்கியராஜ்.