Vanangaan: சூர்யாவுக்கும் உங்களுக்கும் பிரச்னையாமே?..மடக்கிப்பிடித்த பத்திரிகையாளர்..அசராமல் பதிலளித்த பாலா!

தமிழ் சினிமாவில் தனித்தன்மை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக திகழும் பாலா அடுத்ததாக வணங்கான் படத்தை இயக்கி வருகிறார்.

Continues below advertisement

 'வணங்கான்’ படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுடன் பிரச்னை ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் பாலா பதிலளித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் தனித்தன்மை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக திகழும் பாலா அடுத்ததாக வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவே தயாரித்து நடிக்கிறார். ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே சூர்யா - பாலா கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய படங்களின் வெற்றியால் வணங்கானுக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

அதேபோல் சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டரின் வெற்றியால் சூர்யாவின் கேரியரிலும் வணங்கான் குறிப்பிடத்தகுந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3, 4 கேரக்டர்களை மட்டுமே சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சூர்யாவின் நடிப்பு பசிக்கு இக்கதை நல்ல விருந்தாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையில் வணங்கானின் முதற்கட்ட படப்பிடிப்பு, கன்னியாகுமரியில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த நிலையில், படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கும் பாலாவுக்கு இடையே மோதல் நடந்ததாகவும், அதனால் அந்தப்படம் கைவிடப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தானும் பாலாவும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போட்டோவை பகிர்ந்து நாங்கள் விரைவில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். இதனால் அந்த பிரச்னை குறித்தான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் பாலாவிடம் வணங்கான் படம் எப்படி வந்துருக்கு என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, வந்துருக்கு இல்ல...வந்துட்டு இருக்கு என தெரிவித்தார். தொடர்ந்து  ஷூட்டிங் ஸ்பாட்ல சூர்யாவுக்கும் உங்களுக்கும் சண்டையாமே என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உங்களுக்கும் எனக்குமா? என பத்திரிக்கையாளரை பார்த்து பாலா பதிலளித்தார். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola