தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைக் கொண்டவர் இயக்குநர் பாலா. இன்று அவருக்கு 57 ஆவது பிறந்தநாள். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையின் அழகியலை பாலா தனது படங்களில் எப்படி சித்தரித்தார் எனபதை பார்க்கலாம்.
அழகற்றதின் அழகிய
பாலாவின் கதைக்களங்கள் பெரும்பாலும் சமூகத்தில் விளிம்பு நிலை மக்களைப் பற்றியதாகவே இருந்திருக்கிறன. நவீனமயமாகிக் கொண்டுவரும் உலகத்தில் வெளிச்சத்திற்கே வராத மனிதர்களின் கதைகளை தனது படங்களில் படம்பிடித்து காட்டுகிறார். மாற்றுத்திறனாளிகள், திருடர்கள், பினம் எறிப்பவர்கள், பஞ்சம் பிழைக்கு பரதேசம் போனவர்கள், கூத்துக் கலைஞர்கள் என நாம் வாழ்நாளில் ஒரு நொடி அதிகம் சிந்தித்திராத மனிதர்கலே பாலாவின் கதாநாயகர்கள். இவர்களின் வாழ்க்கையில் இருக்கும் வலி, கோபம் , நகைச்சுவை , கொண்டாட்டம் அனைத்தையும் தனது படங்களின் மூலம் மக்களை ரசிக்க வைத்திருக்கிறார். நாம் எதை அழகற்றது என்று முகம் சுளித்து நகர்கிறோமோ அதில் ஒரு அழகைக் காணக்கூடியக் கண்கள் பாலவினுடையது.
உண்மையைத் தேடும் படைப்பாளி
ஒரு பணக்காரன் மன நிம்மதியை தேடி அலைகிறான். ஒரு எழை நிம்மதி மற்றும் பணத்தைத் தேடி செல்கிறான். ஒடுக்கப்பட்ட ஒருவர் நீதியைக் கேட்டு நிற்கிறார். சமூக கட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தேடல் இருக்கிறது. உண்மை என்கிற ஒன்று ஒவ்வொரு மனிதனைப் பொருத்து மாறுபடும் போது இதில் ஒன்று சரி ஒன்று தவறு என்று நம்மால் எப்படி முடிவு செய்ய முடியும். இந்த எந்த சமூக கட்டமைப்பிற்குள்ளும் வராத மக்களின் வாழ்க்கையில் என்றும் தீராத போராட்டம் ஒன்று இருந்து வருகிறது. இவர்களின் கதைகளை பேசும் பாலா அவர்களின் வாழ்க்கையில் இருந்து அந்த உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கிறார். அது சில நேரங்களில் எதார்த்ததில் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம் ஆனால் அந்த வாழ்க்கையின் நியாயங்கள் கொடூரமானவைதான் என்பதை பாலாவின் படங்கள் காட்டின.
உதாராணத்திற்கு நான் கடவுள் படத்தில் மாற்றுத்திறனாளியான ஹம்சவள்ளிக்கு அவளது மரணமே அவளுக்கு மோட்சம் அளிக்கக் கூடிய ஒன்று. ஒரு ஒட்டுமொத்த வம்சமே அடிமகளாகிப்போனதன் துயரம் தான் பரதேசி படத்தின் இறுதிக்காட்சி.
துயரங்களை சுமப்பவனே படைப்பாளி தினிப்பவன் அல்ல
தன்னுடைய துன்பகங்களை பிறருக்கு கடத்துவதும் பிறருடையத் துன்பங்களை தனதாக உணர்ந்து அதில் இருக்கும் ஏதோ ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்து பொதுவில் வைப்பது மட்டுமே. பாலா தான் விரும்பும் ஒரு உண்மைக்காக தனது கதைகளில் தனது கதாபாத்திரங்களின் மேல் அந்த வலிகளை தினிக்கத் தொடங்கியதே அவரது படப்பின் குறைபாடு. அவர் தாரை தப்பட்டைப் படத்தில் ஒரு கோரமான காட்சிகளை பார்க்கும் பார்வையாளர்கள் அடைவது வெறும் ஒரு விபத்தைப் பார்த்த அதிர்ச்சியை மட்டுமே உணர்கிறார்கள். ஒரு படைப்பாளனின் வேலை திடுக்கிடும் செய்திகளை வழங்குவது இல்லை. தற்போது பாலா இயக்கிவரும் வணங்கான் திரைப்படத்தில் இந்த உண்மையை உணர்ந்திருப்பார் என்று நம்புவோம். பாலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.