அட்லீ


இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ (Atlee), ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸை வசூல் மழையால் நிரப்பினார். அடுத்தபடியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து கடந்த  ஜவான் படத்தை இயக்கிய அட்லீ, இந்தியாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார்.


ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தததைத் தொடர்ந்து பாலிவுட்டில் அட்லீயின் மார்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக ஹாலிவுட் என பல திட்டங்களை நடைமுறைப்படுத்த இருக்கிறார் அட்லீ.


அல்லு அர்ஜூன் படம் ட்ராப்


ஜவான் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் உடன் அட்லீ கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தப் படத்திற்கு அட்லீ இயக்குநர் சம்பளமாக 80 கோடி கேட்டதால் இப்படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் படத்தை கைவிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அட்லீ மீண்டும் பாலிவுட் நடிகர் ஒருவரையே தனது நாயகராக தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது .


சல்மான்கான் படத்தை இயக்கும் அட்லீ






பாலிவுட்டின் கிங் என்றழைக்கப்படும் ஷாருக்கானுடன் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து தற்போது நடிகர் சல்மான் கான் உடன் அட்லீ கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சல்மான் கானுக்கு அட்லீ கதை சொல்லி அதில் நடிக்க சல்மான் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடிக்க இருக்கிறார் சல்மான்கான். இப்படத்தில் சத்யராஜ் வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கும் புல் , முருகதாஸ் இயக்கும் சிகந்தர் , தற்போது அட்லீ என அடுத்தடுத்து இரு தமிழ் இயக்குநர்களுக்கு சல்மான் கான் வாய்ப்பு கொடுத்துள்ளார்.