அட்லீ
ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் அட்லீ. தொடர்ந்து விஜயை வைத்து தெறி , மெர்சல், பிகில் உள்ளிட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவராக இடம்பிடித்தார். தமிழ் சினிமாவைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. உலகளவில் 1000 கோடிகளுக்கும் மேலாக இந்தப் படம் வசூல் செய்தது. ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் ஜவான் படத்தில் விஜய் நடிக்காதது குறித்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
6 வருடங்களுக்கு பிறகு
சமீபத்தில் அட்லீ நேர்காணல் ஒன்று அளித்துள்ளார். கிட்டதட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார் அட்லீ. இந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார். இதில் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகமளிக்கும் தகவல் ஒன்றை அட்லீ பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
விஜய் ஷாருக்கான்
எனக்கு பெரிதாக சினிமாவில் நட்வு வட்டாரங்கள் எல்லாம் கிடையாது. நான் அதிகம் இருந்ததே விஜய் அண்ணாவுடன்தான். ஒரு முறைய என்னுடைய பிறந்தநாளுக்காக ஷாருக்கான் சென்னை வந்திருந்தார். நான் விஜய்க்கு கால் செய்து அவரை வருமாறு அழைத்தேன். அப்போது அவர்கள் இருவரும் என்னவென்று பேசி என்னை அழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஷாருக்கான் என்னை அழைத்து “ நீ எப்போதாவது இரண்டு ஹீரோக்களை வைத்து படம் எடுக்க முடிவு செய்தால் நாங்கள் இருவரும் ரெடியாக இருக்கிறோம் என்று சொன்னார்.
விஜய் அண்ணாவும் ”நீ எதாவது பண்ணிட்டு சொல்லு” என்றார். என்னால் இதை ஹேண்டில் செய்ய முடியும் என்று நம்பிதான் அவர்கள் இதை சொல்லி இருக்கிறார்கள். நானும் ரொம்ப சீரியஸாக ஒரு கதையை எழுத முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். ஒரு வேளை அது என் அடுத்தப் படமாக கூட இருக்கலாம். இப்போதைக்கு செமயான சூப்பரான ஒரு கதையை நான் எழுத முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்” என்று அசால்ட்டாக சொல்லி இருக்கிறார்.
ஹாலிவுட் எண்ட்ரி
இதைத்தொடந்துதான் ஹாலிவுட்டிலும் ஒரு படத்தை இயக்குவதற்காக வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அட்லீ தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஜவான் படத்தைப் பார்த்துவிட்டு, தங்களுடன் ஒரு படத்தை இயக்க விருப்பமா என்று கேட்டுள்ளார்களாம். தற்போது அந்த வேலைகளையும்தான் கவனித்து வருவதாகவும் அட்லீ தெரிவித்துள்ளார். ஒரு வேளை ஷாருக்கான் விஜய்யை ஹாலிவுட் படங்களில் நடிக்க வைத்து விடுவாரோ.