உலகளவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கின்றன அமெரிக்க நீதித் துறை வெளியிட்டிருக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ். ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மின்னஞல்களில் பல்வேறு முக்கிய பிரபலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. இதில் பிரபல இந்திய திரைப்பட இயக்குநர் ஒருவரது பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும் அது இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் அக்‌ஷ்யப் தான் என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவலை  தற்போது அவர் இந்துஸ்தான் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் மறுத்துள்ளார்.

Continues below advertisement

பாலியல் குற்றவாளி ஃஜெப்ரி  எப்ஸ்டீன் குற்ற விசாரணை தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை அண்மையில் பொதுப்பார்வைக்கு வெளியிட்டது. எப்ஸ்டீனின் செல்ஃபோன் உரையாடல்கள் , அந்தரங்க காணொளிகள் என பல அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்வேறு கடத்தப்பட்ட இளம் பிள்ளைகளின் வீடியோக்கள் பார்ப்போரை கலங்கவைத்துள்ளன. டோனால்டு ட்ரம்ப் தொடங்கி உலக நாடுகளின் பல்வேறு அரசியல் தலைவர்கள் , விஞ்ஞானி , திரைபிரபலங்களின் பெயர்கள் இந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக சில இந்தியர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் பிரதமர் மோடியின் இந்த சில முறை குறிப்பிட்டப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. 

எப்ஸ்டீன் ஃபைல்ஸில் இந்திய பிரபலங்கள்

 பிரபல ஆண்மீக குரு தீபக் சோப்ரா , திரைப்பட இயக்குநர் மீரா நாயர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எப்ஸ்டீனுடன் தீபக் சோப்ரா தொடர்பில் இருந்ததை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. எப்ஸ்டீன் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் மீரா நாயர் கலந்துகொண்டுள்ளார். இவர்கள் தவிர்த்து இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யபின் பெயரும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஷாங்காயில் நடக்கவிருந்த நிகழ்வு ஒன்றில் 'ஒரு பிரபல பாலிவுட் இயக்குநர்' என்று அனுராக் கஷ்யபின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்ததாக சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement

தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதனை மறுத்துள்ளார் " ஒரு மாதத்தில் தனக்கு 15 பேச்சாளராக அழைப்பு வரும். அவற்றுக்கு பெரும்பாலும் நான் பதிலளிக்கமாட்டேன். அந்த கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள பீஜிங் நாட்டிற்கு நான் சென்றதே இல்லை. அந்த தகவலை பார்த்தாலே தெரியும். யாரோ ஒருத்தருக்கு அனுப்பபட்ட மின்னஞ்சல் அது. அதை பார்த்தாலே உண்மை என்னவென்று தெரியும் . என் படங்களைவிட என்னைப் பற்றிய தகவல்கள் தான் வேகமாக பரவுகின்றன" என்று அவர் கூறினார்

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் நடிகராக அனுராக் கஷ்யப் அறிமுகமானார். விடுதலை , லியோ , மகாராஜா ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகரிடையே கவனமீர்த்தார். தற்போது பாலிவுட்டில் இருந்து வந்து தெண் இந்திய திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.