அமீர் இயக்கிய ராம் படம் வெளியாகி இன்றுடன் 20ஆண்டுகள் நிறைவடைகின்றன.    மிக ஆதார்த்தமான ஒரு உரையாடலை நிகழ்த்திய படம் ராம். ஒரு அன்னைக்கும்  மகனுக்கு இடையிலான ஆன்மிகமான ஒரு உணர்வைப் பற்றிய படமாக இப்படம் இருக்கிறது. இந்த கதைக்கருவை கையாண்ட  நான் பார்த்த மூன்று படங்களை குறிப்பிடுகிறேன்


 


ஃபிரெஞ்சு இயக்குநர் ஸேவியர் டோலன் இயக்கிய Mommy, I Killed My Mother.


 


மலையாளத்தில் பூதகாலம் படத்தை இயக்கிய ராகுல் சதாசிவம் ( மம்மூட்டி நடித்து தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் ப்ரமயுகம் படத்தை இயக்கியுள்ளார்.) 


 


 இந்த மூன்று படங்களுமே அன்னை மகனுக்கு இடையிலான அன்பின் உச்சத்தை, மோதலின் உச்சத்தை, வெறுப்பின் எல்லைவரை சென்று மீள்வதை ஏதோ வகையில் கதைவழியாக நமக்கு சொல்ல முயற்சிக்கும் படைப்புகள். ஒரு அன்னை மகனுக்கு இடையிலான உரையாடல் களம் என்பது சினிமாவில் மிக அரிது. ஆழமில்லாமல் அன்பை போதிக்கும் தொனியில்  பேசப்பட்ட படங்களே அதிகம்.


அமீர் இயக்கிய ராம் படம் தனித்துவமானதாக நிற்கிறது. எங்கள் வீட்டில் ராம் படத்தை விரும்பி பார்த்தது நானும் எனது அம்மாவும் தான். ஆண்களாலும் தாய்மை அடைந்திருந்த பெண்களும் அதிகம் நெருக்கமானவர்களாக இருந்தார்களா என்று ஒரு குட்டி சர்வே கூட எடுத்துப் பார்க்கலாம்.


 


தனது தாய் மீது அதீத பாசம் வைத்திருக்கக் கூடிய ஒருவன். அவன் மற்றவர்களைப் போல் அல்ல. அவனுக்கென்று உலகத்தைப் பார்ப்பதும் அதனுடன் அவன் உரையாடுவதும் மற்றவர்களை விட கொஞ்சம் வித்தியாசமானது. அவனை முழுவதுமாக அறிந்து வைத்தவர் அவனது அம்மாதான். வேறு யாராலும் அவனை முழுதாக புரிந்துகொள்ள முடியாது. அவன் அதை அனுமதிக்கவும் மாட்டான். தனக்கு சுவாரஸ்யம் இல்லாத இந்த உலகத்தில் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அவன் இருப்பது அவனது அம்மாவுக்காக தான். 


 


நான் சாமி புள்ள டா என்று அவன் சொல்வது அவன் கடவுளின் மகன். யாருக்கும் உயர்ந்தவனும் தாழ்ந்தவனும் இல்லை என்கிற கர்வம் ஜீவாவின் குரலில் எதிரொலிக்கும். தனது அம்மாவை நோக்கி அவன் நடந்து வருவது ஒரு ஒரு விலங்கு  தன் அன்னையை பார்த்து அவள் வாஞ்சைக்காக ஓடிவருவது போல் அவனது நடை. இப்படியான ஒரு நபரிடம் இருந்து அவனது தாயைப் கொலை செய்து அந்த பழியை அவன்மேல் சுமத்துவது என்பது ஷேக்ஸ்பியரின் நாடகத் தருணங்களின் போன்றது.


 


கூடுதலாக இந்த படத்தை ஒரு த்ரில்லராக ராம் எடுத்த முடிவுதான் இந்தப் படத்தை நவீனமாக மாற்றும் ஒரு அம்சம்.  தன்னை அறிந்த ஒரே நபர் இல்லாதபோது ஒரு மனிதன் யாரிடம் போராடப் போகிறான். அப்படியான நிலையில் ஜீவாவை அமீர் சில தருணங்களில் நிலைக்க வைத்திருப்பார். அவன் எதுவும் செயலாற்றாமல் இருந்தால் அவனை இந்த உலகம் சுரண்டி அழிக்கும் . இனி அவன் தனது அம்மாவின் சிறகுக்குள் இல்லை. தனக்கான முடிவை தானே எடுக்க வேண்டும். படத்தின் முடிவில் ராம் வந்து நிற்பது இந்த இடத்திற்கு தான். அவனுக்கும் அவன் அம்மாவிற்குமான ஆன்மீகமான உரையாடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சுருக்கமாக சொன்னால் மனிதர்களிடையே அறத்திற்கும் சுரண்டலுக்குமான மோதல் என எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் அமீர் தனது கதையுலகில் ஏதோ ஒரு சிறிய அறத்தை தொட்டுக்காட்டிக் கொண்டே இருக்கிறார். கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஒரு மீனை தொட்டிலுக்குள் விடும் அகச் சுதந்திரம் நம் எத்தனை பேருக்கு இருக்கு...


அது ராம் என்கிற சாமி புள்ளைக்கு இருக்கு.


இன்னும்கூட படத்தின் லொகேஷன் பற்றி யோசித்தால் ராம் படத்தைப் பற்றிய இன்னொரு அழகான உணர்வு ஏற்படுகிறது. தனது அன்னையின் அனைப்பிலே இருக்க விரும்பும் ஒருவன் இருப்பது கடுங்குளிரான ஒரு மலைப்பிரதேசத்தில். அவள் இல்லாதபோது அவன் அதிகம் எதிர்கொள்வதும் குளிர்தான். அவள் இழப்பு இல்லாமலாக்கியது அந்த கதகதப்பை தான். 


 


தனது கரியரில் தொடர்ச்சியாக ஜீவா வித்தியாசமான கற்றது தமிழ், ஈ , ஜிப்ஸி, போன்ற  கதைகளை தேர்ந்தெடுப்பதும் அதில் மற்ற படங்களைவிட அதிக நடிப்பாற்றல் வெளிப்படுத்தியிருக்கிறார். சரண்யா பொன்வண்ணன் ஒவ்வொரு பெரும்பாலான இளைஞர்கள் தங்களது அன்னையை தொடர்படுத்திக் கொள்ளும் தோற்றம் கொண்டவர். அவரது நடிப்பும் அப்படிதான். அன்னையின் பலகீனங்களையும் விடலைத்தனத்தையும் பல கதாபாத்திரங்களில் நிகழ்த்தி காட்டியவர்.


யுவனின் நிழல் இங்கு நிஜம், ஆராரோ பாடல் யுவன் கதையை உள்வாங்கிக் கொண்ட வீரியத்தை காட்டும் பாடல்கள். இடில். ஒரே ஒரு வெஸ்டர்ன் பாடலான பூம் பூம் பாடல் படத்தை சமகாலத்துடனும் தொடர்புபடுத்தியது. 


 


ராம் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளன. பருத்திவீரன் , ராம் , இருபடங்களிலுமே சினிமாவில் இயக்குநர் அமீர் தன் ஊடகத்தின் வழியாக உரையாடிய சிறந்த ஒரு படைப்புகள்.