இந்தி நல்ல மொழி என்றும், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் நடிகை சுஹாசினி கூறிய நிலையில், அதற்கு இயக்குநர் அமீர் பதில் கொடுத்துள்ளார்.
இந்தி நல்ல மொழி என்றும், இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் நடிகை சுஹாசினி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் அவரது பேச்சுக்கு இயக்குநர் அமீர் பதில் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “சுஹாசினி இந்தி பேசுகிறவர்கள் நல்லவர் என்கிறார். அப்படியானால் தமிழ் மொழி பேசுகிறவர்கள்.. கன்னட மொழி பேசுகிறவர்களெல்லாம் கெட்டவர்களா.. இந்த மண்ணில் ஆரியம் ஆழமாக காலுன்றி நிற்கிறது. அது மிகவும் ஆபத்தானது. அந்த ஆரியம் புதிது புதிதுதாக ஏதாவது ஒன்றை கொண்டு வந்துகொண்டிருக்கும்.
அது இந்தி தெரிந்துகொண்டால் தப்பில்லை போன்றவற்றை சொல்லும். முன்னால் சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவப்படிப்புக்குள் நுழைய முடியும் என்ற நிமைமை இருந்தது. இதனை நீதிக்கட்சி திராவிடக் கட்சிகள் உடைத்து இப்போது இருக்கும் நிலைமையை கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீண்டும் பழைய நிலைமைக்கே நம்மை அழைத்து செல்லுகின்றனர். இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று சொல்கிறார்கள். இங்கு உன்னுடைய நாடு எது..? இந்தி மொழி குறித்து திரைக்கலைஞர்கள் பேசுவது அவர்களின் சுயலாபத்திற்காக..” என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்