தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான ஏ.எல்.விஜய் அஜித், த்ரிஷா நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பொய் சொல்லப்போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், வனமகன், இது என்ன மாயம்,தியா, தேவி, தேவி-2  உள்ளிட்ட பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 


இதற்கிடையில் 2014 ஆம் ஆண்டு நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்த ஏ.எல்.விஜய் அவரை 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின் 2 ஆண்டுகள் கழித்து டாக்டரான ஐஸ்வர்யா என்ற பெண்ணை அவர் 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். 






கடைசியாக நடிகை கங்கனா ரணாவத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடிக்க, அவரது வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். 


இதனிடையே அவரது பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அக்கவுண்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது.இது ஏ.எல்.விஜய்யின் கவனத்துக்கு வரவே தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது தான் எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லை என்றும், போலி கணக்குகளை நம்பி யாரும் ஏமாற வேண்டும் எனவும் அவரது தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 


சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஏ.எல். விஜய்யின் பெயரில் போலி கணக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண