கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ 10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. தவெக சார்பாக தலா ரூ 20 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு பலர் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில்  சர்கார் படத்தில் விஜயுடன் நடித்த ஆரு பாலாவின் ஃபேஸ்புக் பதிவு தற்போது வைரலாகி வருகிறது .

Continues below advertisement

விஜய் பற்றி நடிகர் ஆரு பாலா பதிவு

சர்கான் படத்தின் போது விஜயுடனான உரையாடலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆரு பாலா பதிவிட்டுள்ளார் . இந்த பதிவில் அவர் " சர்கார் படம் சூட்டிங்லே என் படத்தை எந்த தியேட்டர்ல பார்ப்பீங்கனு கேட்டாரு .. உதயம் தியேட்டர்ல பார்ப்பேன் சார் சொன்னே.. லேசாக சிரித்து விட்டு. நான் அரசியலுக்கு செட்டாவேனா கேட்டாரு.. நான் சிரித்த படி நீங்கள் அரசியலுக்கு செட்டாக மாட்டீங்க சார் சொன்னே ஒரு நொடி என் முகத்தை உண்ணிப்பாக கவனித்து விட்டு ஏன் அப்படி சொல்றீங்க கேட்டாரு..உங்க மேல கொலை கேஸ் இல்லை.. உங்க மேல கற்பழிப்பு வழக்கு இல்லை..உங்ககிட்ட சாராய பேக்டரி இல்லை..உங்க மேல கட்ட பஞ்சாயத்து கேஸ் இல்லை ..கோடி கணக்கில் கொள்ளை அடிக்கிற மெடிக்கல் காலேஜ் இல்லை..உங்ககிட்ட ரவுடிசம் பண்ண ஆள் இல்லை . இது எதுவுமே உங்ககிட்ட இல்லை அதனால் நீங்க அரசியலுக்கு செட் ஆக மாட்டீங்க சார் சொன்னே..லேசாக சிரித்து விட்டு மக்களுக்கு நல்லது செய்ய இதெல்லாம் தேவை இல்லையே நண்பா என்றார்..ரொம்ப சென்சிட்டிவ் ஆன மனிதன்.. இப்படி ஒரு நிகழ்வு அவர் மனதை மீளா துயரத்திற்கு கொண்டு சென்று இருக்கும்..உயிர் இழந்த ஆண்மாகளுக்கு ஆழ்ந்த இரங்கல்" என அவர் பதிவிட்டுள்ளார். 

Continues below advertisement

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழப்பு 

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த தவெக அரசியல் பரப்புரையின்போது விஜயைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அப்போது ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 81 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பம் திமுக சதி என ஒருபக்கம் தவெக தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றன. மறுபக்கம் சொன்ன நேரத்திற்கு வராதது , கூட்டத்தை ஒருங்கிணைக்கும் தலைமைப் பன்பு இல்லாதது என விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருங்கிணைப்பு ஆணையம், இன்று இரண்டாம் நாளாக சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்கிறது. மேலும், கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசல் சம்பவ விசாரணைக்காக புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.