தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். இவர் தற்போது பல படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். ஜென்டில்ல்மேன் திரைப்படம் எடுத்த சமயத்தில் அந்த படத்தின் அசோஷியேட்டாக இருந்தவர்  இயக்குநர் ஏ.வெங்கடேஷ். சமீபத்தில் ஜென் டில்மேன் திரைப்படம் உருவான விதம் குறித்த நினைவுகளை நேர்காணல் ஒன்றில் அசைப்போட்டிருக்கிறார் வெங்கடேஷ்


அதில் "சூர்யன் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலை நடக்கும் பொழுதே, ஜென்டில்மேன் கதையை ரெடி பண்ணிட்டாரு ஷங்கர் சார். கதை சொன்னாரு , அழகிய குயிலேனு ஒரு கதை. அவ்வளவு அருமையான கதை . ஆனால் கமர்ஷியல் இல்லாம வேற ஒரு ஜானர்ல கதை. அப்போ நான் சொன்னேன் , ஏங்க இப்படி ராவா கதை சொன்னா தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள மாட்டாரு. கமர்ஷியல் மிக்ஸ் பண்ணலாம்னு சொல்லி , ஒரு கமர்ஷியல்  மிக்ஸ் பண்ணுறேன் கதையில.  அதன் பிறகு ஷங்கர் சாரோட நண்பர்கள் முன்பிருந்த கதைதான் நல்லாருக்குனு சொன்னதும் என்னிடம் வந்து சொன்னார். சரி ஓக்கே. இந்த கதையை ஓரமாக வையுங்கள் . கமர்ஷியலா ஒரு கதைய ரெடி பண்ணுவோம் என்றேன். அப்படி உக்காந்து டெவலப் பண்ணின கதைத்தான் ஜென்டில்மேன். அந்த கதையை ரெடி பண்ணதும் , அதற்கு தயாரிப்பாளர் தேடி , நானும் ஷங்கர் சாரும் அலைந்தோம். நடேசன் பார்க்ல இருந்துதான் கதை ரெடி பண்ணோம். ஷங்கர் சார் கதை சொல்லும் பொழுது அழகா சொல்லுவாரு. பல இடங்கள்ல தேடி அலைந்தோம்..




 என்னது ஐயருங்குறான் , கொள்ளையடிக்கிறாங்குறான்னு தயாரிப்பாளர்கள் நினைத்திருப்பாங்களோனு என்னுடைய கணிப்பு. திடீர்னு ஒருநாள் சரத்குமார் சார்கிட்ட கதை சொல்லுவோம், அவருக்கு நிறைய படங்கள் வருது, நம்மல பரிந்துரை செய்வாருனு சொல்லி அவர்கிட்ட போய் கதை சொன்னோம். அவரு கதை செமையா இருக்கு.  தயாரிப்பாளர் யாருனு கேட்டாரு. அவர் படத்துல நடிக்க தயாராயிட்டாரு ஆனால் நாங்க தொடர்ந்து தயாரிப்பாளர் தேடி அலைந்தோம். அந்த சமயத்திலதான் பவித்ரன் - குஞ்சுமோன் இருவரும் படம் பண்ணலனு செய்தி வெளியானது.  குஞ்சுமோன் மலையாள இயக்குநரை வைத்து தமிழ்ல படம் பண்ண போகிறார்னு சொன்னாங்க. சார் நீங்க இப்போ , குஞ்சுமோன் சார்கிட்ட கதை சொல்லுங்களேன் என்றேன் ஷங்கர் சார்க்கிட்ட. அவரு இல்லையா , நம்ம இயக்குநரோட வேற சண்டை . வேண்டாம் என்றாரு. நான் சொன்னேன் எப்படியும் அவரு யாரையாவது வைத்து படம் பண்ணதான் போறாரு, சொல்லுங்க என்றேன். அதன் பிறகு நான் 1 ரூபாய் காயின்ல கால் பண்ணி   நான் கேட்டேன். உடனே ஷங்கர் சாரை வர சொல்லிட்டாரு .  திரும்ப வரும்பொழுது செக்கோடு வந்தார் ஷங்கர் சார்.  அடுத்த மாதம் ஷூட்டிங் போக சொல்லிட்டாங்கனு சொன்னாரு. அதன் பிறகு ஒவ்வொரு கலைஞர்களும் இணைய ஆரமித்தார்கள் . அதன் பிறகு சரத்சாருக்கு கால்ஷீட் பிரச்சனை வர முடியல , டாக்டர் ராஜசேகர் , கார்த்தி என 5 பெரிய ஹீரோக்கள் கிட்ட போனோம்.  யாரும் செட் ஆகல அதன் பிறகு சேவகன் படத்தை பார்த்து அர்ஜூன் சாரை ஃபிக்ஸ் பண்ணோம். அந்த படம் எனக்கு மிகப்பெரிய படிப்பினை. அந்த படம் சயமத்தில் நான் அசோஷியாட்டாக இருந்த சமயத்தில் காஸ்டியூம் ரெடி செய்ய சொல்லியிருந்தேன். அடுத்த நாள் 7 மணிக்கு ஷூட்டிங் .நான் காஸ்டியூம் ரெடி பண்ண சொல்லிட்டேன். ஆனால் நான் டைமிங் சரியாக சொல்லவில்லை, அதனால் ஒரு போலிஸ் காஸ்டியூம் எடுத்து வர தாமதமாகிவிட்டது.  என் மீதுதான் தவறு . உடனே என்மேல் கோவித்துக்கொண்டு , என்னிடம் பேசாமல் என்னை அப்படியே நடு ரோட்டில் விட்டுச்சென்றுவிட்டார் ஷங்கர்.” என தனது ஆரம்பகால அனுபவங்களை பகிர்ந்துள்ளார்  ஏ.வெங்கடேசன் .