ஆக்ஷன், அதிரடி, ரொமான்ஸ், திரில்லர் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை காட்டிலும் காமெடி படத்தை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் மக்களை அவர்களின் கவலை மறந்து  வாய்விட்டு சிரிக்க வைத்து விடை கொடுப்பது என்பது காமெடி திரைப்படங்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. 


அந்த வகையில் KJR ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆலம்பனா'. நடிகர் வைபவ், பார்வதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் முனீஸ்காந்த், காளி வெங்கட், யோகி பாபு, ஆனந்தராஜ், ரோபோ ஷங்கர், திண்டுக்கல் ஐ லியோனி, பாண்டியராஜ், கபீர் சிங், முரளி சர்மா உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


 



ஃபேண்டஸி திரைப்படம் :


குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம் குடும்பத்துடன் பார்க்க கூடிய ஒரு ஃபேண்டஸி திரைப்படம். பூதமாக முனீஷ்காந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு  இசையமைக்க குழந்தைகள் விரும்பும் வகையில் ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளார் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். 


டிசம்பர் 15ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. படக்குழுவினர், பத்திரிகை நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 


தாத்தாவாக திண்டுக்கல் ஐ லியோனி :


இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திண்டுக்கல் ஐ லியோனி பேசுகையில் "ஆலம்பனா படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரத்தில் வைபவ் தாத்தாவாக நடித்துள்ளேன். மற்ற நடிகர்களை காட்டிலும் எனக்கு தான் இப்படத்தில் அதிக காஸ்டியூம் பயன்படுத்தப்பட்டது. நான் நடிகர் முனீஷ்காந்தின் தீவிரமான ரசிகன். அவருடன் இப்படத்தில் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. மற்ற நடிகர்களுக்கும் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்து பழகினார்கள். 


 



சாதாரணமாக வந்து போகும் ஒரு கதாபாத்திரம் அல்ல என்னுடையது. டான்ஸர்களோடு சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளேன். என்னை டான்ஸ் வைப்பதற்குள் இயக்குநர் பட்டபாடு இருக்கே. பாவம் அவர் மிகவும் கஷ்டப்பட்டு என்னை ஆட வைத்தார். குழந்தைகள் மிகவும் விரும்பி பார்க்க கூடிய ஒரு படமாக இது இருக்கும்" என்றார் ஐ லியோனி. 


அதே போல ஆலம்பனா படத்தின் ஹீரோ வைபவ் பேசுகையில் "இதுவரையில் ஜெய், பிரேம்ஜி மாதிரி நடிகருடன் தான் நடித்து வந்தேன். முதல் முறையாக முனீஷ்காந்த், காளி வெங்கட் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படம் முழுக்க சிரித்து மகிழும் வகையில் இருக்கும் என்பதால் நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.