தீபாவளி என்றாலே புது டிரஸ், ஸ்வீட், பட்டாசு, தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் தான். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு இரண்டு படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகளவில் வெளியாகியுள்ளன. ஒன்று நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார்.


எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பிரின்ஸ் :


தெலுங்கு திரைப்பட இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த "பிரின்ஸ்" திரைப்படம் தீபாவளி ரிலீஸாக இன்று உலகளவில் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீஸாக முதல்முறை இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்களின் ஆரவாரம் அமோகமாக இருந்தது. 


 



நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக இப்படத்தின் மூலம்  நேரடியாக ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி இப்படத்தை எடுத்துள்ளார்கள். படம் வெளியாவதற்கு முன்னரே 100 கோடி வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையயை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






 
  
"சர்தார்" படம் எப்படி இருக்கு ? 
 
தீபாவளிக்கு வெளியான மற்றுமொரு திரைப்படம் நடிகர் கார்த்தியின் நடிப்பில் "சர்தார்". இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான ஒரு ஸ்பை த்ரில்லர் திரைப்படமான "சர்தார்" இன்றும் உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 


 






 


நடிகர் கார்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவதாக இப்படமும் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என்ற அதீத எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஒரு அதிரடியான திரைப்படத்தை கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி. நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சர்தார் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ளது ஆஹா தமிழ் நிறுவனம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.