தமிழ் , தெலுங்கு , இந்தி என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க திரைப்படம் மூலம் கதாநயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இருமொழிகளில் உருவான ஸ்பைடர் திரைப்படம் , கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் , சூர்யா நடிப்பில் உருவான என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இந்தியன் 2 , சிவகார்த்திகேயனுடன் அயலான் , 'அட்டாக்', 'ரன்வே 34', 'தேங்க் காட்', 'டாக்டர் ஜி', 'மிஷன் சின்ட்ரெல்லா', 'சத்ரிவாலி' உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணமாகிவிட்டதாக கிசு கிசுக்கப்படுகிறது.
நடிகர்-தயாரிப்பாளர்-தொழில்முனைவோர் என பன்முக துறையில் கலக்கி வரும் ஜாக்கி பக்னானியை ரகுல் ப்ரீத் சிங் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் வெளிப்படையாகவே காட்டத்தொடங்கினர். அவ்வபோது பொது இடங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஜோடியாக காணப்படுவார்கள் இந்த காதல் புறாக்கள் . இந்த நிலையில் ரகுலும் ஜாக்கியும் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டதாக வட இந்திய ஊடகங்க எழுதி வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் “அது திருமணமாக இருக்கட்டும் அல்லது இது போன்ற முட்டாள்தனமான வதந்திகளாக இருக்கட்டும். நான் எதையும் கண்டுகொள்ள போவதில்லை.இல்லாத ஒன்று என்னை ஒரு போதும் தொந்தரவு செய்யாது. நான் கண்களை மூடிக்கொண்டு வேலை செய்ய கற்றுக்கொண்டேன். நான் எப்போதும் வெளிப்படையாக பேசுபவள் .இது போன்ற ஒரு நிகழ்வு இருக்குமானால் முதலில் நான்தான் அதுகுறித்து பேசுவேன். மக்கள் யூகத்திற்கு இடம் கொடுக்காமல் , உண்மை வெளிவரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. நான் இப்போது 10 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். எனது கவனம் முழுவதும் அதில்தான் உள்ளது. மற்ற அனைத்திற்கு உரிய நேரம் வரும் “ என தெரிவித்துள்ளார்.