நடிகர் சிரஞ்சீவி தனக்கு புற்று நோய் இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.
சமீபகாலமாக நடிகர் சிரஞ்சீவிக்கு கேன்சர் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று தற்போது குணமாகியுள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து சிரஞ்சீவியை நலம் விசாரித்து வருகிறார்களாம். இதனால் தற்போது இது தொடர்பான விஷயத்தில் நடிகர் சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி தனது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு புற்று நோய் பரவி வருவதாக வந்த வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார். ”தான் கேன்சரால் பாதிக்கப்படவில்லை. வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனையை தான் மேற்கொண்டேன். கேன்சருக்கான பரிசோதனையை தொடர்ந்து செய்வதன் மூலம் கேன்சர் வருவதை ஆரம்பத்திலேயே அறிய முடியும். அதற்கான பரிசோதனை மட்டுமே செய்து கொண்டேன்”. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனக்கு கேன்சர் இல்லை என்றும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இந்த செய்தி பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தான் ஒரு கேன்சர் சென்டர் திறப்பு விழாவில் பங்கேற்று, நிகழ்ச்சியில் பேசியபோது, ரெகுலராக கேன்சருக்கான டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், கேன்சரை தவிர்க்கலாம் என்றும் பேசியதாகவும் அதேபோல தான் கொலனோஸ்கோப் டெஸ்ட் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ள அவர், அப்போது தனக்கு நான் கேன்சரஸ் பாலிப்ஸ் இருந்தது கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு கேன்சர் இல்லை என நடிகர் சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக பல்வேறு கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க
Electricity Price Hike: ஜூலையில் எகிறப்போகும் மின் கட்டணம்? : கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்!