Balaji Murugadoss |”என்னது யாஷிகாவை நான் விபத்துல மாட்டிவிட்டேனா ?!”- பிக்பாஸ் புகழ் பாலாஜி விளக்கம்!

அந்த விபத்தை ஏற்படுத்தியது பாலாஜிதான் என்றும் , அவரை காப்பாற்ற வந்த யாஷிகாவை பாலாஜி மாட்ட வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின

Continues below advertisement

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகர் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடந்த எதிர்பாராத விபத்து காரணமாக தனது தோழியை இழந்த யாஷிகா, மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 24-ஆம் தேதி  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு என்ற இடத்திற்கு வந்த போது அவருடைய கார் விபத்துக்குள்ளானது அனைவரும் அறிந்ததே! இந்த விபத்தில் முதுகு, வயிறு, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு யாஷிகா ஆனந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. யாஷிகாவிற்கு சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும் யாஷிகாவின் அம்மா தெரிவித்திருந்தார். இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்ட்டுக்கு யாஷிகா மாற்றப்பட்டுள்ளார். 

Continues below advertisement


ஆனாலும் யாஷிகா முழுமையாக குணமடைய மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என கூறப்படுறது. இந்நிலையில் பிக்பாஸ் புகழ் பாலாஜி குறித்த டாக் ஒன்றும் இணையத்தில் உலா வந்தது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டும் யாஷிகா விபத்து ஒன்றில் சிக்கினார். அப்போது சாலையில் சென்ற ஸ்விக்கி ஊழியர் ஒருவர் மீது மோதியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த விபத்தை ஏற்படுத்தியது பாலாஜிதான் என்றும் , அவரை காப்பாற்ற வந்த யாஷிகாவை பாலாஜி மாட்ட வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது.   பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதும் கூட பாலாஜி ரசிகர்கள் இந்த விபத்து குறித்து சமூக வலைத்தளங்களில் கிசு கிசுத்தனர். அப்போது இதற்கான விளக்கம் எதுவும் கொடுக்காத பாலாஜி, தற்போது பதிலளித்துள்ளார்.  இன்ஸ்டாகிராம் லைவில் ஃபேன்ஸ் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் , இதற்கான விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார்.  


 

அதாவது “2019 ஆண்டு யாஷிகாவுக்கு நடந்த விபத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, நான் டிரைவிங் லைஸன்ஸ் வாங்கி கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆகிடுச்சு, இது வரைக்கும் நான் எந்த விதி மீறல்லயும் இறங்குனது கிடையாது. காரணம் நான் சட்ட விதிகளை மதிக்குற ஆள்!, என்னுடைய பைக்கை கூட நான் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செலுத்த மாட்டேன்.  நாம மட்டுமல்லாம , மத்தவங்களும் அதனால பாதிக்கப்படுவாங்க. என்னை பின்பற்றும் என் ரசிகர்களுக்கும் அது முன் உதாரணமாகிடும் , குறிப்பா நான் குடிச்சுட்டு வாகனங்களை ஓட்ட மாட்டேன் அது சட்ட விரோதம்னு எனக்கு தெரியும்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக யாஷிகாவும் பாலாஜியும் காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தன.  இந்நிலையில் யாஷிகா ஆனந்த் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola