திருமணத்திற்கு முந்தைய உடலுறவு அல்லது கர்ப்பம் குறித்து பிரபல இந்தி நடிகை தியா மிர்சா அதிரடி கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி, ரகுவரன், இஷா கோபிகர் நடிப்பில் வெளியான என் சுவாசக் காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகை தியா மிர்சா நடனமாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தி, பெங்காலி, ஈரான் மொழிப் படங்களில் அவர் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து டிவி மற்றும் வெப் தொடர்களில் நடித்து வந்த தியா கடந்தாண்டு பிப்ரவரியில் தொழிலதிபர் வைபவ் ரெக்கியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தியா கூற ரசிகர்கள் குழப்பமடைந்தனர். காரணம் அவர் திருமணம் செய்ததோ, கர்ப்பமான தகவலோ பலருக்கும் தெரியாமல் இருந்தது. அடுத்த 3 மாதத்தில் ஆண் குழந்தை ஒற்றைப் பெற்றெடுத்தார். அதற்கு அவ்யான் என பெயர் சூட்டியுள்ள நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் கர்ப்பம் குறித்து பலருக்கு பிற்போக்கு எண்ணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இரண்டுமே அவரவர் உரிமை என தெரிவித்துள்ள தியா, அப்படி தனிப்பட்ட விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் தான் பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். அந்த வகையில் என்னைப் பொறுத்தவரை திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் கர்ப்பம் தனிப்பட்ட விருப்பமாகும். அவ்வாறு செய்ய ஆண், பெண் இருவருக்கும் முழு உரிமை உண்டு. மேலும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் குற்றங்களைப் பாருங்கள். பெண்கள் விரும்பினால் கருக்கலைப்பு செய்ய முடியாது என சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட சட்டத்தை மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார்.
தியா தற்போது அனுபவ சின்ஹா இயக்கத்தில் 'பீட்' படத்திலும், ரத்னா பதக் ஷா, பாத்திமா சனா ஷேக் மற்றும் சஞ்சனா சங்கி ஆகியோர் நடித்த 'தக் தக்' என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்