ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் சிறப்பாக நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையான ரகுல் ப்ரீத் சிங் இருக்கிறார். இந்நிலையில் இவர் அண்மையில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வாட்டர் ஸ்போர்டிங்கில் ஈடுபட்டுள்ளார். தண்ணீரில் நடப்பது போன்ற விளையாட்டு அது. அதில் ரகுல் ப்ரீத் சிங் திடும், திடும் என்று நீங்கள் கீழே விழுந்தாலும் கூட உடனே எழுந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


தமிழ் , தெலுங்கு , இந்தி என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க திரைப்படம் மூலம் கதாநயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என  இருமொழிகளில் உருவான ஸ்பைடர் திரைப்படம் , கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் , சூர்யா நடிப்பில் உருவான என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இந்தியன் 2 , 'அட்டாக்', 'ரன்வே 34', 'தேங்க் காட்', 'டாக்டர் ஜி', 'மிஷன் சின்ட்ரெல்லா', 'சத்ரிவாலி' உள்ளிட்ட பல  படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்கிறார்.






திருமண சர்ச்சை: 


நடிகர்-தயாரிப்பாளர்-தொழில்முனைவோர் என பன்முக துறையில் கலக்கி வரும் ஜாக்கி பக்னானியை ரகுல் ப்ரீத் சிங் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் வெளிப்படையாகவே காட்டத்தொடங்கினர். அவ்வபோது பொது இடங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஜோடியாக காணப்படுவார்கள் இந்த காதல் புறாக்கள் . இந்த நிலையில் ரகுலும் ஜாக்கியும் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டதாக வட இந்திய ஊடகங்க எழுதின. இருப்பினும் இருவருமே அது பற்றி இதுவரை எவ்வித தகவலும் தரவில்லை.