‘தூம்’ மற்றும் ‘தூம் 2’ திரைப்படங்களை இயக்கிய சஞ்சய் காத்வி (Sanjay Gadhvi) மாரடைப்பால் காலமானார். 

Continues below advertisement


2004இல் சஞ்சய் காத்வி இயக்கத்தில் வெளியான தூம் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட். 2006-ல் வெளியான தூம்-2 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 2000ஆம் ஆண்டு ’Tere Liye’ படத்தின் மூலம் இயக்குநராக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். 57 வயதான சஞ்சய் காத்வி மும்பையில் உள்ள ’Lokhandwala’ பகுதியில் காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


உடல் முழுவதும் வியர்வையுடன் மயக்கிய விழுந்தவரை அருகில் இருந்தவர்கள் கொகில்பென் அம்பானி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சஞ்சய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


பாலிவுட் பிரபல நடிகர்கள் அபிஷேக் பச்சன், பிபாஷா பாசு ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சஞ்சய் காத்விக்கு இன்னும் மூன்று நாட்களில் (நவம்பர்.22.2023) பிறந்தநாள் வரும் நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தென்னாப்பிரிக்காவில் தூம்-2 திரைப்படத்தின்போது எடுத்துகொண்ட புகைப்படத்தை அபிஷேக் பச்சன் பகிந்து டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 




“ சஞ்சு இரண்டு வாரங்களுக்கு முன் உங்களுடன் நான் பேசுகையில், தூம்-2 திரைப்பட ஷூட்டிங் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள். ஆனால், இப்படி ஒரு பதிவை எழுத வேண்டியிருக்கும் என அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை.


இந்தச் செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். என் மீது எனக்கே நம்பிக்கை இல்லாதபோது நீ என் மீது நம்பிக்கை வைத்தது எனக்குத் தெரியும். உங்களால்தான் எனக்கு முதல் ஹிட் கிடைத்தது. உங்கள் நட்பு என்னுள் என்றும் பொக்கிஷமாய் இருக்கும்.” என்று அபிஷேக் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.