100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த என்ஜாய் எஞ்சாமி பாடல்

அனைவரின் பாராட்டை வெற்ற என்ஜாய் எஞ்சாமி பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Continues below advertisement

தமிழ் பின்னணிப் பாடகி  தீட்சிதா வெங்கடேசன் (அ)  தீ மற்றும் ரேப் பாடகர் அறிவு குரலில் வெளிவந்த என்ஜாய் எஞ்சாமி பாடலை யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை  கண்டு கழித்துள்ளனர்.  

Continues below advertisement

சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், அமித் கிருஷ்ணன் இயக்கத்தில் இந்த பாடல் உருவானது. தெற்காசிய இசைக் கலைஞர்களின் திறமையாக உலகறியும் நோக்கில்  உருவாக்கப்பட்ட மஜ்ஜா இசைதளம்  இப்பாடலை தயாரித்தது. ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர் ரகுமான் சில தினங்களுக்கு முன்பாக மஜ்ஜா இசைதள நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்பாடல் 7 மார்ச்சு 2021ஆம் ஆண்டு அன்று வெளியாகி குறுகிய காலத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பல சாதனைகளை செய்துவருகிறது. 

எஞ்சாமி பாடல் ஒப்பாரி பாடல் வகையில் இருந்தாலும், மகிழ்ச்சி நிறைந்த கதை சொல்லியாக மக்கள் மனதை வென்றெடுத்தது.

 

 

இந்த பாடல் ராப் மற்றும் கிராமத்து இசையில் அழிந்தும் வரும் தாவரங்கள், காடுகள், பறவைகள் மற்றும் விலங்குகளை மையமாக வைத்து உழைக்கும் விளிம்பு நிலை மக்களை போற்றும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்… அழகான தோட்டம் வச்சேன்… தோட்டம் செழிச்சாலும்… என் தொண்டை நனையலேயே என்ற அழுத்தமான பாடல் வரிகள் உழைப்பு  சுரண்டலை எடுத்துரைத்தன.  

தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின அரசியலுக்கு இந்த எஞ்சாமி பாடல் புது உத்வேகத்தையும் அளித்தது என்றால் அது மிகையாகாது.   

Continues below advertisement
Sponsored Links by Taboola