சன்னி லியோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, விரைவில் வெளியாகவுள்ள படம் ஓ மை கோஸ்ட்; இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்னர் நடைப்பெற்றது. இதில், நடிகை சன்னி லியோன், நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா, ஜி பி முத்து என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவின் பேசிய நடிகர் சதீஷ், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து சில விஷயங்களை மேடையில் பேசினார். இந்த பிரச்சினை சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடித்தது.
ஆடை விவகாரம்:
ஓ மை கோஸ்ட் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை சன்னி லியோன் புடவையில் வந்திருந்தார். நடிகை தர்ஷா குப்தா, மாடர்னான காக்ரா ஜோலி உடையில் வந்திருந்தார். இது குறித்து மேடையில் பேசிய நடிகர் சதீஷ், “மும்பையில் இருந்து வந்திருக்கும் சன்னிலியோன் தமிழ் கலாச்சாரப்படி பட்டுப்புடவையில் வந்திருக்கிறார்; ஆனால் கோவை பெண் தர்ஷா குப்தா அவங்களும் ஒரு ட்ரெஸ் உடுத்திக்கொண்டு வந்திருக்கிறார் என நக்கலாக பேசினார்.
சதீஷின் பேச்சுக்கு, பிரபலங்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தர்ஷா குப்தாதான் சன்னி லியோன் மற்றும் தனது உடை குறித்து பேச சொன்னதாகவும், விளையாட்டிற்குதான் அப்படி பேசியதாகவும், அது யாரையெனும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறும் வீடியோ வெளியிட்டிருந்தார் நடிகர் சதீஷ்.
Also Read|பப்ளிக் ஸ்டேட்மெண்டில் இருந்து ஜகா வாங்கிய சதீஷ்.. காட்டமாக பதிலளித்த தர்ஷா குப்தா!
சதீஷ்-தர்ஷா மோதல்?
சதீஷின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதுவரை அமைதியாக இருந்த தர்ஷா குப்தா ட்விட்டரில் சீறத்தொடங்கினார். இது குறித்து அப்போது ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்த தர்ஷா குப்தா, “நான் மேடையில் உங்களை இந்த விஷயத்தையா கூற சொன்னேன்? யாராவது, என்னப்பத்தி மேடையில அசிங்கமா பேசுங்க-னு சொல்லுவாங்களா? அன்னைக்கு எனக்கும் அவ்ளோ கஷ்டமா இருந்தது;
இருந்தாலும் நான் அதை பெருசா காட்டிக்கல. பட், நீங்க இப்டி பேசுவது நல்லதல்ல” என குறிப்பிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த ட்வீட்டை டெலிட்டும் செய்து விட்டார். இந்த விவகாரம் நடந்த பல நாட்கள் கடந்த நிலையில், இவர்கள் குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. தற்போது, இவர்கள் இருவரும் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு தங்களது நட்பு குறித்து பேசியுள்ளனர்.
இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து விளக்கம்:
நடிகர் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா அந்த ஆடை விவகாரத்திற்கு பிறகு முதன்முறையாக ஒரு நேர்காணலில் கலந்து கொண்டுள்ளனர். அதில், அந்த ஆடை விவகாரத்திற்கு பிறகு இருவருக்கும் இடையேயான நடிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் சதீஷ் மற்றும் தர்ஷா, பின்வருமாறு பதில் கூறியுள்ளனர்.
சதீஷ் :ஆடை விவகாரத்திற்கு பிறகுதான் நாங்கள் இன்னும் நெருங்கிய நண்பர்களானோம். அதன் பிறகுதான் நிறையவே பேசினாேம். அவங்களோட கஷ்டங்கள் நிறைய எனக்கு புரிய ஆரம்பித்தது. தர்ஷாவின் அம்மாவிடமும் நான் பேசினேன். எனது மனைவியடமும் அவர் உரையாடினார். இந்த விஷயத்தை நாங்கள் இருவரும் பாசிட்டிவாகத்தான் பார்க்கிறோம்.
தர்ஷா: அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் இன்னுமே நிறைய பேசினோம். எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது.
நெகடிவ் கமெண்ட்ஸ் குறித்த கேள்விக்கு பதில்:
சதீஷ் அரசியல் பிரமூகர்களிலிருந்து பல தலைவர்கள் வரை அனைவருக்கும் நெகடிவ் கமெண்ட்ஸ் என்பது வந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி நெகடிவ் கமெண்ட்ஸை எதிர் கொள்ளும் அனைவரும் தளபதி கூறியதுபோல், “Ignore Negativity” என்று போய்க்கொண்டேயிருக்க வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்;
தகவல் உதவி: galatta