சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழில் மாறன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ‘தங்கமகன்’ படத்திற்கு தனுஷூம் அனிருத்தும் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்தத் திரைப்படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் இந்தப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.