தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகர்களின் வரிசையில் ஒருவரான நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தன்னுடைய படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். அசாத்தியமான நடிப்பால் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்த தனுஷ் நடிப்பில் கடந்த ஜூலை 26ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ராயன்'. பா. பாண்டி படத்தை தொடர்ந்து இரண்டாவதாக 'ராயன்' படத்தை இயக்கி அதில் சிறப்பாக நடித்தும் இருந்தார்.
ராயன் வெற்றி:
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படத்தில் சந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம் , செல்வராகவன் , எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை மிக சிறப்பாக செய்து இருந்தார்.
மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'ராயன்' படம் முதல் நாளில் இருந்தே சக்கைபோடு போட்டு வருவதுடன் வசூல் ரீதியாகவும் தூள் கிளப்பி வருகிறது. ரிலீஸுக்கு முன்பிருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. முன்பதிவுகளில் மட்டுமே ராயன் படம் 6 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் படம் வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 33 கோடி வசூலித்ததாகவும், உலகளவில் 75 கோடி வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் 100 கோடி பாக்ஸ் ஆபீசில் கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்பஸ்டர் பிறந்தநாள்:
ஜூலை 28ம் தேதியான நேற்று தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "என்னுடைய வெற்றிக்கு தூண்களாக நிற்கும் மக்கள், பத்திரிகை, ஊடகம், என்னுடைய ரசிகர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்கி இந்த பிறந்தநாளை பிளாக்பஸ்டர் பிறந்தநாளுக்காக கொடுத்துள்ளீர்கள். ஓம் நமச்சிவாய" என போஸ்ட் மூலம் அனைவரும் நன்றிகளை தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
மேலும் தன்னுடைய படத்துக்கு கிடைத்த வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் திருவண்ணாமலை கோயிலுக்கு மகன்களுடன் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகின்றனர்.
இதுவரையில் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக பொருட்செல்வத்தில் உருவான 'ராயன்' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.