ஓம் திரைப்படத்தின் காலை 6 மணிக்காட்சிக்கு அனுமதியளித்த தமிழக அரசிற்கும், முதலமைச்சர் விஜய்க்கும் நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
"முதலமைச்சர் விஜய்க்கு நன்றி"
இது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது எனவும், அத்தகைய திரைப்படத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் மக்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு என்பது திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான் எனக்குறிப்பிட்டுள்ளார்
வருகிற 20-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ஓம் திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், முதலமைச்சர் விஜய்க்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள தனுஷ், திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம் அறிக்கையில் கூறியுள்ளார்.
காலை 6 மணிக்காட்சிக்கு அனுமதி
இதற்கு முன்னதாக திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து, ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அளிக்கப்பட்டிருந்த நிலையில்,சமீபத்தில் அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்துக்கு தினசரி 6 காட்சிகள் திரையிடவும், காலை 06.00 மணிக்காட்சிக்கும் அனுமதியளித்தும் முதல்வர் விஜய் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
