வேல்ஸ் பல்கலைகழக நிகழ்வில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடம் பேசினார். இதே நிகழ்வில் வைத்து வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் நடித்துள்ள கர திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்தார். அதன்படி வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷின் கர திரைப்படம் வெளியாகும் என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55  ஆவது படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் வண்டர்பார் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ஶ்ரீலீலா ,சாய் பல்லவி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர் இசையமைக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக தனுஷின் கர திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்பட்ம கர. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் இப்படத்தை தயாரித்துள்ளது. மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இன்று வேல்ஸ் பல்கலைகழகத்தில் நிகழ்ந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார். 

கல்லூரிக்கு செல்லும் கனவு பற்றி தனுஷ்

மாணவர்களிடம் பேசிய தனுஷ் " நான் பள்ளி படிக்கும்போது எப்படா காலேஜ் போவோம் அப்போதான் நினைத்த நேரம் எல்லாம் கட் அடிக்கலாம் என்று நினைப்பேன். ஆனால் துரதிர்ஷவசமாக நான் கல்லூரிக்கு செல்லவில்லை. நடிக்கத் துவங்கிவிட்டேன். கல்லூரிக்கு சென்ற என் நண்பர்கள் எப்போடா காலேஜ் முடித்து வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழலாம் என்று புலம்புவார்கள். ஆனால் வாழ்க்கைக்கு உள்ளே போனப்பிறகு தான் நமக்கு பள்ளி  கல்லூரியைப் பற்றிய அருமை தெரியும். " என்று தனுஷ் கூறினார்

Continues below advertisement

வடசென்னை 2 பற்றி 

வடசென்னை 2 ஆம் பாகத்தில் வேல்ஸ் ஃபிலிம் தான் தயாரிக்க இருக்கிறது. கூடிய விரைவில் நாங்கள் வடசென்னை 2 படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம். நீங்களும் இந்த படத்தைப் பற்றி தொடர்ந்து கேட்டு வருகிறீர்கள். இனிமேல்  நான் போகுமிடங்களில் வடசென்னை 2 பற்றி கேள்வி வராது என்று எதிர்பார்க்கிறேன். 

கர திரைப்பட ரிலீஸ் தேதி

இந்த நிகழ்வில் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்தார். வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி கர திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.